திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் 50 அம்மா உணவகங்கள்... "அம்மா கேஸ்" முடியும் வரை நோ ஓப்பனிங்??
சென்னை: சென்னையில் 50 அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கின்றன. ஆனாலும் இவற்றை திறக்கும் வழிதான் தெரியவில்லை. தற்போது ஜெயலலிதா முதல்வராக இல்லாத நிலையில் இவற்றைத் திறக்க சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு விருப்பம் இல்லை என்று கூறுகிறார்கள்.
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது சென்னை மாநகராட்சியால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த அம்மா உணவகம். அம்மா திட்ட வரிசையில் முதல் திட்டம் இந்த அம்மா உணவகம்தான். இதற்கு ஏழைத் தொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள், வேலைக்குச் செல்வோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தற்போது தமிழகம் முழுவதும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது 207 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் எப்போதும் போல கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் மேலும் 50 அம்மா உணவகங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.
மேலும் 100 அம்மா உணவகங்களை திறக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அதில், 50 அம்மா உணவகங்கள் கட்டி தயாராக உள்ளன. 60 முதல் 70 அம்மா உணவகங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. சுமார் 40 அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் நிலம் மற்ற அரசு துறைகளில் இருந்து பெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கட்டி முடிக்கப்பட்டு தயாராக உள்ள 50 அம்மா உணவகங்களை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என்று அந்தந்த வார்டு கவுன்சிலர்கள் ஆர்வமாக உள்ளனர். ஆனால் அதிகாரிகள் தாமதம் செய்து வருகிறார்களாம். காரணம் தெரியவில்லை.
தற்போது ஜெயலலிதா ஆட்சியில் இல்லை. ஜாமீனில் வெளியே வந்து அப்பீல் தீர்ப்புக்காக காத்திருக்கிறார். இந்த நிலையில் திறப்பு விழாவை நடத்த மேயர் சைதை துரைசாமிக்கு மனம் இல்லை என்று கூறுகிறார்கள். ஜெயலலிதா விடுதலையாகி வந்த பின்னர் தடபுடலாக இவற்றை மொத்தமாக திறந்து விழா போல கொண்டாட அவர் விரும்புகிறார் என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications