போலீஸ் போல நடித்து கேரள தொழிலதிபரிடம் ரூ.50 லட்சம் கொள்ளை - கோவையில் பரபரப்பு
கோவை: கோவையில் காவலர்கள் போல நடித்து ரூபாய் 50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற வழிப்பறி கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். இவர் கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறார். தனது தொழிலுக்கு தேவையான எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்க தமிழகம் வந்தார். கோவையை சேர்ந்த நண்பர் கனகராஜ் என்பவர் திருச்சியில் உள்ள தனக்கு அறிமுகமான ராஜேஷை அணுகுமாறு கூறினார்.

இதனையடுத்து சைனேஷ் அவருடைய நண்பர்கள் கனகராஜ், சஞ்சீவ், ரவி, சார்ஜித் ஆகிய ஐந்து பேரும் ஒரு வாடகை காரில் திருச்சி சென்றனர். அவர்களை சந்தித்த ராஜேஷ், "திருச்சியை விட கோவையிலேயே பொருட்கள் விலை குறைவாக வாங்கலாம்" எனக்கூறி உபேந்திரராவ் என்பவருடன் அவர்களை திருப்பி அனுப்பியுள்ளார்.
உபேந்திரராவ் உடன் சைனேஷ் மற்றும் கனகராஜ் மூவரும் ஒருகாரிலும், மற்றவர்கள் எல்லோரும் வாடகை காரிலும் கோவை நோக்கி வந்தனர்.
இவர்கள் சென்ற கார் வெள்ளக்கோவில் அருகிலுள்ள பகவதிபாளையம் அருகே சென்றபோது சைனேஷ் வந்த காரை ஜீப்பில் வந்த போலீஸ் உடை அணிந்த நால்வர், சாதாரண உடையில் இருந்த மூவர் கொண்ட ஒரு கும்பல் வழிமறித்தனர்.
காரை சோதனையிடுவதுபோல் நடித்த அவர்கள் பெட்டியில் இருந்த 50 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு உபேந்திரராவை மட்டும் தங்கள் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு மற்றவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு வருமாறு கூறிச்சென்று விட்டனர்.
இதைதொடர்ந்து சைனேஷ் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தொடர்பு கொண்டு விசாரித்த பொது எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதன் பிறகே இது திட்டமிட்ட கொள்ளை சம்பவம் என தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சைனேஷ் வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். இக்கொள்ளைச் சம்பவம் குறித்து திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications