"ஷாக்”.. கண் இமைக்கும் நேரத்தில் போன 6 உயிர்கள்! மாமல்லபுரம் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து
சென்னை: மாமல்லபுரத்தை அடுத்த மனமை பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் அரசுப்பேருந்தும் ஆட்டோவும் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விபத்தில் 3 பெண்கள், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உயிரிழந்து இருக்கின்றனர்.
புதுச்சேரி நோக்கி சென்னையில் இருந்து ஏராளமான பயணிகளுடன் அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே இந்த பேருந்து சென்றுகொண்டு இருந்தபோது சென்னை நோக்கி எதிர் திசையில் ஆட்டோ ஒன்று வந்துகொண்டு இருந்தது. கிழக்கு கடற்கரை சாலையில் சென்றுகொண்டிருந்த இந்த ஆட்டோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர்பாராத விதமாக அந்த ஆட்டோவும் பேருந்தும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோ ஓட்டுநர், அதில் சென்ற 3 பெண்கள், 2 குழந்தைகள் என 6 பேருமே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து தொடர்பாக அவர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சில நொடிகளில் பேருந்து மோதி ஆட்டோவில் இருந்த 2 குழந்தைகள், 3 பெண்கள் என 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்குள்ளான ஆட்டோ முழுவதுமாக சேதம் அடைந்து இருக்கிறது. மோதிய பேருந்தின் ஒரு பகுதி முன்பக்கம் மட்டுமே சோதமடைந்து உள்ளது.
பேருந்து ஓட்டுநர், நடத்துனர், பயணிகளுக்கு என்ன ஆனது என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை. அதேபோல் விபத்தில் உயிரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்போல் இருப்பதாக கூறப்படாலும், அவர்களின் சொந்த ஊர் எது? எங்கு சென்றுகொண்டு இருந்தார்கள் என்ற எந்த தகவலும் கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications