சிறைக்குள் செல்போன் பேசும் கைதிகளுக்கு 6 மாதம் தனிமைச் சிறை: புதிய தண்டனை அமல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் வாழும் கைதிகள் செல்போனில் பேசுவது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுக்கு 6 மாதம் தனிமைச்சிறை என்ற புதிய தண்டனை அமலுக்கு வருகிறது.

அவ்வப்போது சிறை அதிகாரிகளின் துணையோடோ அல்லது இல்லாமலோ சிறைக்கைதிகள் செல்போனில் பேசி மாட்டிக் கொள்வதுண்டு. சமீபத்தில் கூட கேரளத்துச் சிறைகளில் கைதிகள் ஸ்மார்ட் போன் மூலம் பேஸ்புக்கில் உலா வந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்நிலையில், சிறைக்குள் இது போன்ற அத்துமீறல்களை களையும் முயற்சியாக புதிய அதிரடி தண்டனை ஒன்றை உடனடியாக அமல் படுத்துகிறார்கள் சிறை அதிகாரிகள். அதன் படி, சிறைக்குள் செல்போனில் பேசி பிடிபடும் கைதிகள், 6 மாதம் தனிமைச்சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

பொது தொலைபேசித் திட்டம்...

பொது தொலைபேசித் திட்டம்...

தமிழகத்தில் சிறை கைதிகள் போனில், உறவினர்களிடம் பேசி மகிழும் வகையில், பிரமாண்ட பொது தொலைபேசி திட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

ரூ 1.63 கோடியில்....

ரூ 1.63 கோடியில்....

இந்த திட்டத்தின்படி ரூ.1.63 கோடி செலவில், 9 மத்திய சிறைகள், 3 பெண்கள் சிறைகள் மற்றும் புதுக்கோட்டையில் உள்ள இளம்குற்றவாளிகள் சீர்திருத்தப்பள்ளி ஆகியவற்றில் மொத்தம் 53 பொது தொலைபேசிகள் அமைக்கப்பட்டுள்ளது.

அதிரடி தண்டனை...

அதிரடி தண்டனை...

இந்தப் பொது தொலைபேசி திட்டமானது, கைதிகள் சிறைகளில் செல்போனில் பேசுவதை தடுப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே இனிமேல், சிறைகளில் செல்போனில் பேசும் கைதிகளுக்கு கடும் தண்டனை வழங்கும் அதிரடி திட்டம் ஒன்றை, சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி. திரிபாதி கொண்டு வந்துள்ளார்.

சுற்றறிக்கை....

சுற்றறிக்கை....

இந்த திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அனைத்து சிறைத்துறை சூப்பிரண்டுகளுக்கும், திரிபாதி சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சிறைத்துறை டி.ஐ.ஜி.க்கள் துரைசாமி, மவுரியா, அனிபா ஆகியோருடன் ஆலோசனை நடத்தியபின் அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தனிமைச் சிறை...

தனிமைச் சிறை...

அதன்படி, இனி சிறைகளில், செல்போனில் பேசி பிடிபடும் கைதிகள் உடனடியாக தனிமைச்சிறையில் அடைக்கப்படுவார்கள். 6 மாதங்கள் அவர்கள் இந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

கிரிமினல் நடவடிக்கை....

கிரிமினல் நடவடிக்கை....

அதே 6 மாத காலம், குறிப்பிட்ட கைதிகள், பார்வையாளர்களை சந்திக்கவும் தடை விதிக்கப்படும். மேலும் அந்த கைதிகள் மீது கிரிமினல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பரோல் இல்லை....

பரோல் இல்லை....

அவசரகால விடுமுறை மற்றும் பரோலில் செல்லவும் இந்த கைதிகளுக்கு அனுமதி இல்லை. கைதிகளின் செல்போன் பேச்சுக்கு துணை போகும், சிறை ஊழியர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிறை அதிகாரிகளுக்கும்....

சிறை அதிகாரிகளுக்கும்....

மேலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் அல்லது உடந்தையாக இருக்கும் சிறை ஊழியர்கள், உடனே பணியில் இருந்து, டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் கூட, இதேபோன்று குற்றம்சாட்டப்பட்ட பாலையா என்ற சிறை அதிகாரி ஒருவர் தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+