60 வயது மனைவியின் நடத்தை மீது 68 வயது விவசாயிக்கு சந்தேகம்.. அடித்தே கொன்றார்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே 60 வயது மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை அடித்தே கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்புஜம். 60 வயதாகிறது. இவரது கணவர் பெயர் காத்தமுத்து. 68 வயதான இவர் விவசாயி ஆவார். வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வந்தார் அம்புஜம். இத்தம்பதிக்கு 2 மகள்கள், ஒரு மகன். அனைவரும் திருமணமாகி செட்டிலாகி விட்டனர்.

காத்தமுத்து தினசரி குடிப்பார். குடித்து விட்டு மனைவியைப் போட்டு அடிப்பார். செலவுக்கும் பணம் தர மாட்டார். இதனால்தான் அம்புஜம் டீக்கடைக்கு வேலைக்குப் போயுள்ளார். இதனால் காத்தமுத்து தனது மனைவி நடத்தை குறித்து சந்தேகப்பட்டு சண்டை பிடித்துள்ளார்.
தினசரி இதே வேலையாகப் போய் விட்டது காத்தமுத்துவுக்கு. சம்பவத்தன்றும் இரவு வீட்டுக்கு வந்த காத்தமுத்து தனது மனைவியிடம் சண்டை பிடித்தார். அடித்துள்ளார். பின்னர் தூங்கி விட்டார். நள்ளிரவுக்கு மேல் எழுந்த அவருக்கு அம்புஜம் மீது ஆத்திரம் வந்துள்ளது.
இதையடுத்து வீட்டில் கிடந்த உருட்டுக் கட்டையை எடுத்து சரமாரியாக அம்புஜத்தை அடித்துள்ளார். இதில் அம்புஜம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பின்னர் காத்தமுத்துவைக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications