கமுதி அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் இரு தரப்பினரிடையே மோதல்-7 பேருக்கு அரிவாள் வெட்டு
இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
கமுதி: கமுதி அருகே கூட்டுறவுசங்க தேர்தல் முன்விரோதம் காரணமாக இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆனையூர் கூட்டுறவு சங்க தலைவர் தேர்தலுக்கான போட்டி நடைபெற உள்ளது. இதற்காக ஆனையூர் கூட்டுறவு சங்கத் தலைவர் பதவிக்கு மருதங்கநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் வன்னிமுத்து, தி.மு.க. பிரமுகர் தியாகராஜன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது ஏற்கனவே இருந்த முன்விரோதம் காரணமாக இருதரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் திடீரென மோதிக் கொண்டனர்.
இதில் இருதரப்பையும் சேர்ந்த 7 பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர். அவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications