கடலுக்கு சென்ற 737 மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்.. அச்சம்கொள்ளத் தேவையில்லை.. அமைச்சர் ஜெயக்குமார்!
கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி: கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 2000 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. மீனவர்களை மீட்டுத்தரக்கோரி கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையில் மீனவர்கள் குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு ஓகி புயலால் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்குமோ என அவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் கடலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

முதல்வர் வலியுறுத்தல்
அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கன்னியாகுமரிக்கு சென்றுள்ளனர். கடற்படை ஹெலிகாப்டர்கள் மூலம் மீனவர்களை மீட்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதல்வர் பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்கள் பத்திரமாக உள்ளனர்
மீனவர்களை மீட்கும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதிய தலைமுறைக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் கடலுக்கு சென்ற 737 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

திருச்சூரில் இருந்து திரும்புகின்றனர்
மேலும் 685 மீனவர்கள் 66 படகுகளுடன் கரை திரும்பி வருகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 52 மீனவர்கள் 6 படகுகளுடன் திருச்சூரில் இருந்து பேருந்து மூலம் திரும்புகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அச்சப்பட வேண்டாம்
கன்னியாகுமரியில் இருந்து சென்ற மீனவர்கள் லட்சத்தீவில் ஒதுங்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் மீனவர்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications