தமிழக மீனவர்கள் 75 பேர் கைது… மார்ச் 25ல் பேச்சுவார்த்தை நடைபெறுமா?
ராமேஸ்வரம்: புதுக்கோட்டை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்த 75-க்கும் மேற்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டையை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளில் இன்று கடலில் மீன்பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே உள்ள காரைநகர் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, 50 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
இதேபோல் ராமேஸ்வரம்-மண்டபம் பகுதியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 17-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, காங்கேசன் துறைமுகம் மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக மீனவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். இதேபோல் இலங்கை மீனவர்களும் இந்திய கடல் எல்லைக்குள் வரும்போது கைது செய்யப்படுகின்றனர். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அதன்பின்னர் இருநாட்டு சிறைகளிலும் உள்ள மீனவர்கள் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கையின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 172 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். அனைத்து மீனவர்களும் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தற்போது 75 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு நாட்டு மீனவர்களிடையே இலங்கையில் வரும் 25-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் இந்த பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications