தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
சென்னை : தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது...

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கே.மகரபூஷணம், பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் எம்.சந்திரசேகரன், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேந்திரகுமார், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள், வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேரூராட்சிகள் இயக்குனர் ராஜேந்திர ரத்னூ, பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிரன் குராலா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் மேல்படிப்பை முடித்துத் திரும்பியுள்ள காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை சந்தை மற்றும் வர்த்தக இயக்குனர் சி.மனோகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகத்துறை முன்னாள் இயக்குனர் மங்கத் ராம் சர்மா மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications