சங்க தேர்தல், பார்ட்டிகளுக்கு "எஸ்" ... மக்கள் பிரச்சனைக்கு "எஸ்கேப்".. இவர்கள் சீனியர் நடிகர்கள்!!!
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த 1980களை சேர்ந்த சில நடிகர்கள் தற்போது நடக்கும் தமிழ் சினிமா போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்த 1980 களை சேர்ந்த சில நடிகர்கள் தற்போது நடக்கும் நடிகர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம், ஸ்டெர்லைட் ஆலை ஆகிய பிரச்சனைகளுக்காக தற்போது தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் போராடி வருகிறார்கள். காலையில் தொடங்கிய இந்த போராட்டத்தில் பெருவாரியான நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
மவுன அறவழி போராட்டம் என்ற பெயரில் இந்த போராட்டம் நடைபெற்றது. ரஜினி, கமல், ஷங்கர், இளையராஜா ஆகிய முன்னணி திரையுலகினர் இதில் கலந்து கொண்டனர்.

80 களின் நடிகர்கள்
80 களில் திரையுலகில் கொடிகட்டி பறந்த திரைபிரபலங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. மோகன், டி ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக், அர்ஜுன், பிரபு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களின் சக நடிகர்களான ரஜினி, கமல் இதில் கலந்து கொண்டனர்.

நடிகைகளும்
அதேபோல் 80 களில் பெரிதாக இருந்த நடிகைகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. ராதா, அம்பிகா, ராதிகா, குஷ்பு, ரேவதி, ராமயா கிருஷ்ணன் ஆகியோரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதே சமயத்தில் சமகால நடிகைகளும் இதில் கலந்து கொள்ளவில்லை. சாய் தன்ஷிகா, வரலட்சுமி சரத்குமார் போன்ற சில நடிகைகள் மட்டும் இந்த போரட்டத்தில் கலந்து கொண்டனர்.

சரத்குமார்
அதேபோல் முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. அதேபோல் ராதா ரவியும் இந்த போராட்டம் பக்கம் தலைகாட்டவில்லை. மேலும் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு இடம்மாறி பெரிய ஆட்களாக வளர்ந்து நிற்கும் பிரகாஷ்ராஜ், பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நபர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

தேர்தல் மட்டும் குறிக்கோள்
ஆனால் இதே 80ஸ் நடிகர், நடிகைகள், நடிகர் சங்க, தயாரிப்பாளர் சங்க தேர்தலில் மட்டும் தவறாமல் போட்டியிடுகிறார்கள். பார்ட்டி என்றா்ல் ஓடுகிறார்கள்.கூத்தடிக்க ஓடும் இவர்கள் மக்கள் போராட்டத்திற்கு வரமாட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications