For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ் டூ: மொத்தம் 90.06% பேர் தேர்ச்சி; மாணவிகள்- 93.4%, மாணவர்கள்- 87.4% மட்டுமே!

By Siva
Google Oneindia Tamil News

90.06% clear Plus 2 exams in TN
சென்னை: பிளஸ் டூ பொதுத் தேர்வில் 90 சதவிகித மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் டூ பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி ஊத்தங்கரையைச் சேர்ந்த மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.

அவரைத் தொடர்ந்து 1192 மதிப்பெண்கள் பெற்று தர்மபுரி மாணவி அலமேலு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 90.06 சதவிகிதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 93.4 சதவிகிதம் மாணவிகளும், 87.4 சதவிகிதம் மாணவர்களும் அடக்கம்.

வழக்கம் போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிரெஞ்சு மொழியை பாடமாக எடுத்து படித்த மதுரை மாணவர் சிவராம் 1192 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இதே போன்று சமஸ்கிருதத்தை பாடமாக எடுத்து படித்த திருச்சி மாணவி ஆனந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார்.

English summary
90.06% students in TN have cleared the Plus 2 exams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X