Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏமாற்றிய காதலி..கடற்கரைக்கு அழைத்து சென்று கல்லாலேயே அடித்துக்கொன்ற காதலன்.. பூம்புகாரில் அதிர்ச்சி!

நாகை அருகே காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலியை காதலனே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

நாகை: காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவியை காதலன் பூம்புகார் கடற்கரைக்கு அழைத்து சென்று கல்லால் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த காதலன் போலீஸில் சரணடைந்துள்ளார்.

ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்தவர் துர்கா. கல்லூரி மாணவியான துர்கா சென்னையில் படித்து வந்தார்.

இவர் அதேப்பகுதியைச் சேர்ந்த மதன்ராஜ் என்பவரை காதலித்த வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக துர்கா மதனிடம் சரியாக பேசாமல் அவரை விட்டு விலகிச் சென்றுள்ளார்.

கடற்கரைக்கு அழைத்து சென்ற காதலன்

கடற்கரைக்கு அழைத்து சென்ற காதலன்

இந்நிலையில் துர்காவை சந்திக்க வேண்டும் எனக்கூறி மதன்ராஜ் அவரை நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பூம்புகார் கடற்கரைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கல்லால் அடித்து கொலை

கல்லால் அடித்து கொலை

மதன்ராஜை தொடர்ந்து காதலிக்க துர்கா மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மதன்ராஜ் கல்லாலேயே அடித்து துர்காவை கொலை செய்தார்.

போலீஸில் சரண்

போலீஸில் சரண்

இதைத்தொடர்ந்து மதன்ராஜ் போலீஸில் அவர் சரணடைந்தார். துர்கா தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றியதாலேயே அவரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

காதலித்து ஏமாற்றிய கல்லூரி மாணவிய காதலன் கல்லாலேயே அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+