அலை அலையாக குவிந்த ரசிகர்கள்.. செல்பி எடுத்து கையசைத்த விஜய்.. என்எல்சியில் திரண்ட மாபெரும் படை!
நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள்.
நெய்வேலி: நெய்வேலி என்எல்சியில் மாஸ்டர் பட ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு நடிகர் விஜயை காண பெரிய அளவில் ரசிகர்கள் கூடி வருகிறார்கள். அவரின் மற்ற படத்தை விட இந்த படத்தின் ஷூட்டிங்கை காண அதிக அளவில் மக்கள் கூடி உள்ளனர்.
சும்மா இருந்தவனை சீண்டிவிட்டு, சூப்பர் ஸ்டார் ஆக்கிட்டீங்க என்று சிவாஜி படத்தில் ஒரு வசனம் வரும். அதுதான் தற்போது நடிகர் விஜய் விஷயத்தில் நடந்துள்ளது. நடிகர் விஜய் வீட்டில் மூன்று நாட்களுக்கு முன் வருமான வரித்துறை சோதனை செய்தது.
நடிகர் விஜய் வீட்டில் நடந்த வருமான வரி சோதனையின் முடிவில் அவரின் வீட்டில் இருந்து ஒரு ரூபாய் கூட பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அவரின் வீட்டில் இருந்து ஆவணங்கள் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது போக சென்னையில் ஏஜிஎஸ் சினிமா பட தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது..

பெரிய விளம்பரம்
இந்த வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்திற்கு பெரிய அளவில் விளம்பரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் இருந்த போதுதான் அவரிடம் வருமான வரித்துறை சோதனை செய்தது. நெய்வேலி என்எல்சியில் ஷூட்டிங் நடக்கும் போது, அங்கே வந்த அதிகாரிகள் விஜயை அழைத்து சென்றனர். ஒருநாள் முழுக்க விஜயை அவரின் வீட்டில் வைத்து அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
|
பெரிய வரவேற்பு
இந்த விசாரணை முடிந்து நேற்று முதல் நாள் ஷூட்டிங் ஸ்பாட் வந்த விஜய்க்கு பெரிய அளவில் பட்டாசு வெடித்து படக்குழு வரவேற்பு கொடுத்தது. அங்கிருந்த விஜய் ரசிகர்கள் பெரிய அளவில் தளபதி கோஷம் எழுப்பி விஜயை வரவேற்றனர். அன்றில் இருந்தே மாஸ்டர் படத்தை பார்க்க கூட்டம் அதிக அளவில் கூடி வருகிறது. வரிசையாக விஜய் ரசிகர்கள் என்எல்சிக்கு சென்று அங்கு ஷூட்டிங்கை பார்த்து வருகிறார்கள்.

மக்கள் கூட்டம்
அதேபோல் இன்றும் நடிகர் விஜய்யை காண என்எல்சி முன்பு ரசிகர்கள் கூடியிருந்தனர். பலநூறு கணக்கில் ரசிகர்கள் அங்கே குவிந்தனர். விஜய் தன்னுடைய காரில் மதியம் ஷூட்டிங் நடக்கும் இடத்திற்கு வந்தார். உள்ளே சென்றவர் ஷூட்டிங் முடித்துவிட்டு மாலைதான் வெளியே வந்தார். அவர் வெளியே வரும் வரை ரசிகர்கள் அங்கேயே காத்து இருந்தனர். வெளியே வந்த விஜய் அங்கிருந்த வேன் ஒன்றின் மீது ஏறி நின்று ரசிகர்களை நோக்கி கையசைத்தார் .
|
இந்தியா வைரல்
அதன்பின் விஜய் அங்கிருந்து கொண்டே ரசிகர்கள் உடன் செல்பி எடுத்தார். விஜயை பார்த்ததும் அங்கே இருந்த ரசிகர்கள் உற்சாகத்தில் கோஷம் எழுப்பினார்கள். தளபதி வாழ்க என்று கோஷம் எழுப்பினார்கள். முன்னதாக மெர்சல் படத்திற்கு இதேபோல் பாஜக கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அப்போது அந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்து, இந்தியா முழுக்க வைரலானது. அதேபோல் தற்போது மாஸ்டர் படத்திற்கும் பெரிய அளவில் விளம்பரம் கிடைத்து உள்ளது.












Click it and Unblock the Notifications