நடத்தையில் சந்தேகம்.. தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தையை மனைவியோடு எரித்துக்கொன்ற கணவன்

மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் 8 மாத குழந்தையும் மனைவியையும் உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு நாடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தூங்கிக்கொண்டிருந்த 8 மாத குழந்தையை மனைவியோடு எரித்துக்கொன்ற கணவன்- வீடியோ

    விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவன் 8 மாத குழந்தையும் மனைவியையும் உயிரோடு எரித்துக்கொன்றுவிட்டு நாடமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி மந்தவெளி பகுதியை சேர்ந்தவர் சரவணன். 35 வயதான இவர் ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். இவருக்கு கனகா என்ற மனைவியும் கார்த்திகா என்ற 7 வயது மகளும், சிவசந்திரன் என்ற 8 மாத ஆண் குழந்தையும் இருந்தனர்.

    சரவணன் மாற்றுத்திறனாளி என்பதால் வேலைக்கு எங்கும் செல்லவில்லை. அவரது தந்தை பால்ராஜ், தாய் விஜயா ஆகியோர் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஆவார்கள்.

    தனியாக வசிப்பு

    தனியாக வசிப்பு

    அவர்களுக்கு வரும் பென்சன் பணத்தை கொண்டு சரவணன் குடும்பம் நடத்தி வந்தார். பால்ராஜீம், விஜயாவும் கள்ளக்குறிச்சியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.

    குழந்தையுடன் தூங்கிய தாய்

    குழந்தையுடன் தூங்கிய தாய்

    நேற்று முன்தினம் இரவு சரவணனும், அவரது மகள் கார்த்திகாவும் வீட்டின் உள் பகுதியில் படுத்து தூங்கினார்கள். கனகாவும், கைக்குழந்தை சிவசந்திரனும் வீட்டின் முன் அறையில் பாயில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

    கருகிய மனைவி, குழந்தை

    கருகிய மனைவி, குழந்தை

    நள்ளிரவில் 1½ மணியளவில் திடீரென்று வீட்டில் தீபற்றி எரிந்தது. வீடு முழுவதும் ஒரே புகை மயமாக இருந்தது. வீட்டில் உள்ள டியூப் லைட்டுகள் வெடித்து சிதறின. கனகாவும், 8 மாத குழந்தை சிவசந்திரனும் தீயில் சிக்கி உடல் கருகி உயிரிழந்தனர்.

    அலறிய சரவணன்

    அலறிய சரவணன்

    வீட்டின் பின்பகுதியில் படுத்திருந்த சரவணன் தீயில் சிக்காமல் உயிர்தப்பினார். அவர் வீடு தீ பற்றி எரிவதை பார்த்து அலறினார். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர்.

    போலீஸ்க்கு தகவல்

    போலீஸ்க்கு தகவல்

    அவர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு கனகாவும், சிவசந்திரனும் உடல் கருகி கரிக்கட்டைகளாக கிடந்தனர். உடனடியாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கனகா மற்றும் 8 மாத கைக்குழந்தை சிவசந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சரவணனிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    நடக்ககூட முடியாது

    நடக்ககூட முடியாது

    அப்போது அவர் இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தனக்கு தெரியவில்லை. என்னால் எழுந்து கூட நடக்க முடியாது. வீட்டில் புகை வந்தவுடன் எழுந்து வந்து பார்த்தேன். என் மனைவியும், குழந்தையும் உடல் கருகி கிடந்தார்கள் எனக்கூறி கதறினார்.

    கிடுக்கிப்பிடி விசாரணை

    கிடுக்கிப்பிடி விசாரணை

    இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். கனகாவின் கணவர் சரவணனனின் பக்கம் போலீசாரின் சந்தேகப்பார்வை திரும்பியது. இதையடுத்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    கணவன் வாக்குமூலம்

    கணவன் வாக்குமூலம்

    இதில் மனைவியையும் குழந்தையையும் தான்தான் எரித்துக்கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டார். மனைவியின் நடத்தையில் கொண்ட சந்தேகத்தால் நள்ளிரவு கனகா குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்றதாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தானும் சேர்ந்து கதறினால் போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்ததாகவும் ஆனால் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தியதில் தப்பிக்க முடியவில்லை என்றும் சரவணன் தெரிவித்தார். சந்தேக புத்தியதால் கட்டிய கணவனே மனைவியையும் 8 மாத குழந்தையும் எரித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திரயுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+