சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் - பரபரப்பு
சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
சென்னை: சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன் மகளுடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்
சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் காவல் ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மனு அளிப்பதற்காக வந்து செல்வார்கள்.

இந்நிலையில்,செல்வி என்ற பெண் இன்று காலை தனது மகள் பூஜாவுடன் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். பிரதான வாசல் அருகே வந்த செல்வி, திடீரென தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது ஆணையர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, விரைந்து சென்று அந்தப் பெண்ணையும், அவருடன் வந்திருந்த அவரது மகள் பூஜாவையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.
அவர்கள் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்? என்பது போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி போலீசார் இரண்டு பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் ஓய்வதற்குள் பெண் ஒருவர் தனது மகளுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications