Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ணகிரியில் கிரானைட் லாரி கவிழ்ந்து விபத்து: வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் பலி

கிருஷ்ணகிரி அருகே கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வீட்டின் திண்னையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிரானைட் கற்கள் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் வீட்டின் திண்னையில் அமர்ந்திருந்த 2 சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள நக்கல்பட்டியில் மோகன் என்பவருக்கு சொந்தமான கிரானைட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் லாரிக்ள் கிரானைட் கற்களை ஏற்றிச்செல்வது வழக்கம்.

A lorry met with an accident near in Kirshnagiri: Two boys killed on the spot

இன்று காலை கிரானைட் தொழிற்சாலையில் இருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிச் சென்றது. அப்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்த ராஜா என்பவரின் 12 வயது மகன் ஹரிஷ் மற்றும முருகேசன் என்பவரின் 6 வயது மகன் கவியரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் சந்திரா என்பவர் படுகாயமடைந்தார். அவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரண்டு சிறுவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+