மயிலாடுதுறையில் மது போதையில் நண்பனின் தாயை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்.. கொடூரம்
மயிலாடுதுறை: நண்பரின் தாயார் தனக்கும் தாயார் என்று பாராமல் நண்பர் மீது உள்ள ஆத்திரத்தில் அவரது தாயாரை பாலியல் பலாத்காரம் செய்த மயிலாடுதுறை இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
மயிலாடுதுறை அருகே உள்ள ஒரு பகுதியை சேர்ந்த 24 வயதாகும் முகமது பைசல் என்பவரும் அவரது நண்பரும் ஒன்றாக டாஸ்மாக்கில் போய் மது வாங்கி வந்துள்ளனர். பின்னர் ஒரு இடத்தில் அமர்ந்து இருவரும் மது அருந்தி உள்ளனர். பின்னர் மயிலாடுதுறை சித்தர்காட்டில் உள்ள உணவகம் ஒன்றில் இருவரும் சாப்பிட்டு உள்ளனர்.

அப்போது மது போதை தலைக்கேறியதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளனர். இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. இந்த தகராறுக்கு பின்னர் முகமது பைசல் மட்டும் வீட்டுக்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரது நண்பர் மயிலாடுதுறையிலேயே இருந்து விட்டார்.
இரவு நீண்ட நேரம் ஆகியும் தனது மகன் வீட்டுக்கு வராததால் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த முகமது பைசல் நண்பரின் தாயார் தனது மகனை பார்த்தாயா? என்று முகமது பைசலிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், உங்கள் மகன் குடித்துவிட்டு மல்லியம் சுடுகாட்டில் விழுந்து கிடக்கிறான் என சொல்லி உள்ளான்.
இதை நம்பிய அந்த பெண் மகன் மீது உள்ள பாசத்தில் முகமது பைசலின் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து தனது மகனை தேடி சுடுகாட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு சென்றதும் மதுபோதையில் இருந்த முகமது பைசல், மதுபோதையில் கேவலமான மிருகம் போல் மாறினார். தன்னுடைய நண்பரின் தாயார் தனக்கும் தாய் என்று நினைக்காமல், நண்பர் மீது உள்ள ஆத்திரத்தில் அவரது தாயாரை முகமது பைசல் பலவந்தமாக கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்திருருக்கிறார். அதன்பிறகு அங்கிருந்து முகமது பைசல் தப்பி ஓடி உள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் வீட்டுக்கு வந்த அந்த பெண் தனது குடும்பத்தினரிடம் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதிருக்கிறார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் முகமது பைசல் மீது பாலியல் பலாத்காரம், பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தார்கள்.. பின்னர் முகமது பைசலை தேடி பிடித்து கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறை கிளைச்சிறையில் அடைத்தனர்.
நண்பரின் மீது உள்ள கோபத்தில் அவரது தாயாரை இளைஞர், பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications