Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் ரெட் சிக்னலை தாண்டினால் இனி சிக்கல்.. அதிகரிக்கும் விதிமீறல்கள்.. ரெடியாகும் மெகா திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ட்ராஃபிக் சிக்னலைத் தாண்டி வேகமாக சென்றால், நீங்கள் போக வேண்டிய இடத்திற்கு சீக்கிரம் போகலாம் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் தவறு.. சிவப்பு விளக்கு போட்ட பின்னரும் நிற்காமல் செல்வதால் உங்கள் பயணம் மேலும் தாமதமாகும். ஏனெனில் உங்களை போல் எதிர் திசையில் வருபவர்களும் நினைப்பதால் உங்களால் சீக்கிரம் போக முடியாத நிலை ஏற்படும்.

பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, அண்ணாசாலையில் சைதாப்பேட்டைக்கும் தேனாம்பேட்டைக்கும் இடையில் சிக்னலை மீறுபவர்கள் குறித்து ஒரு மாதிரி ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வில் சிக்னலை மீறி செல்வது மற்றும் ஸ்டாப்லைன் மீறல் காரணமாக ஒரு நாளைக்கு 20,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒரு திசையில் மட்டும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தாமதமாக 5 கி.மீ தூரத்தை கடக்க வேண்டிய நிலை ஏற்படுகிறதாம்.

90 வினாடி சிக்னல் சுழற்சியில் 350 வாகனங்கள் நந்தனம் சிக்னலை கடந்து இருக்க வேண்டும். இதுதான் கள எதார்த்தம். ஆனால் என்ன நடக்கிறது என்றால், சேமியர்ஸ் சாலையில் இருந்து தி.நகர் செல்லும் வாகனங்கள் சிக்னல் சிவப்பு நிறமாக மாறிய பின்னரும் தொடர்ந்து செல்கின்றன. இது அடுத்த பச்சை சிக்னல் விழுந்த தேனாம்பேட்டை நோக்கிய சாலையில் 30 வினாடிகள் வரை போக்குவரத்தைத் தடுக்கிறது. இந்த நேரத்தில் குறைந்தது 30 வாகனங்கள் சந்திப்பைக் கடக்க முடியும். எனவே இந்த வகையில் சுமார் 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இங்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு திசையில் தாமதமாக செல்கின்றன.

A mega project is ready for trouble if it crosses the red signal in Chennai

சைதாப்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை இடையே ஆறு முக்கிய சிக்னல்கள் உள்ளன. எனவே விதிமீறல்கள் காரணமாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 3,600 வாகனங்கள் தாமதமாக வருகின்றன என்று டைம்ஸ் ஆப் இந்தியா ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருசக்கர வாகன ஓட்டிகள்: இதை உறுதிப்படுத்தும் வகையில், கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வும் இருக்கிறது. சென்னையில் உள்ள கோட்டூர்புரம், வேளச்சேரி, இந்திரா நகர் மற்றும் ஆர்.ஏ. புரம் ஆகிய 6 முக்கிய சாலை சந்திப்புகளில், 39% வாகனங்கள் சிவப்பு விளக்கு மற்றும் ஸ்டாப்லைன் விதிகளை மீறுவது கண்டுபிடிக்கப்பட்டுள்து. மிக மோசமாக இரு சக்கர வாகன ஓட்டிகளே இப்படி சிக்னலை மீறுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

விபத்துக்கள் குறைவு: வாகனங்களுக்கு இடையே ஆக்ரோஷமாக சென்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் நடப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் சிக்னலை மீறி செல்வதை ஊக்குவிக்கிறார்கள். இவர்களை பார்த்து பலரும் சிக்னலை மீறி செல்கிறார்கள். இதன் காரணமாக விபத்துக்களும் நடக்கின்றன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் சிக்னல் விதிமீறல்கள் குறைந்துள்ளன. இதனால் விபத்துக்களும் கணிசமாக குறைந்துள்ளன.

உயிரிழப்பு குறைவு: சிக்னலை மதிக்காமல் செல்வது மற்றும் ஸ்டாப்லைனை தாண்டி செல்வது ஆகியவற்றால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை 2020 இல் 304 ஆக இருந்து கடந்த ஆண்டு 36 ஆக குறைந்துள்ளதாக போக்குவரத்து காவல்துறை பதிவுகள் காட்டுகின்றன. விதிமீறல்களால் இறந்தவர்களின் எண்ணிக்கை 88ல் இருந்து சுமார் 10 ஆகக் குறைந்துள்ளது. சிறந்த சிக்னல் நிர்வாகத்தால் இது சாத்தியம் ஆகி உள்ளது.

விதிமீறல்கள் ஏன்? : இருப்பினும், சிலரது விதிமீறல்கள், சட்டத்தை மதிக்கும் வாகன ஓட்டிகளை தொடர்ந்து தொந்தரவு செய்கின்றன. சட்டத்தை மீறுவதற்கு பல்வேறு சாக்குபோக்குகளை மக்கள் கூறுகிறார்கள். சிக்னல் சிவப்பு நிறமாக மாறும்போது, பின்னால் வரும் வாகனங்கள் மோதிவிடுமோ என்ற அச்சம் காரணமாக நிறுத்துவதில்லை என்று சிலர் கூறுகின்றனர். இன்னும் சிலர் பின்னால் இருந்து இடைவிடாத சத்தம் ஸ்டாப்லைனைத் தாண்டி ஊர்ந்து செல்லத் தூண்டுகிறது என்று கூறுகிறார்கள். சில பைக் ஓட்டுபவர்கள் சூரிய வெப்பம் காரணமாக தப்பிக்க இப்படி செல்வதாக கூறினார்கள்.

மருத்துவ நரம்பியல் உளவியலாளர் பி எஸ் விருதகிரிநாதன் கூறுகையில், "அவர்களுக்கு அடுத்துள்ள வாகன ஓட்டிகள் வேகமாக சிக்னலை விதிகளைமீறி நகர்வதை பார்க்கும் போது அதேபோல் செல்வதையே அவர்களும் விரும்புகிறார்கள் என்றார்.

சாலை பாதுகாப்பு ஆர்வலர் எஸ் கமல் கூறுகையில், மக்கள் வழக்கத்தை விட சற்று முன்னதாகவே தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல விரும்புகிறார்கள். இதனால் இந்த விதிமீறல்கள் மிகவும் அதிகமாகிவிட்டன, யாராவது விதியைப் பின்பற்ற விரும்பினாலும், அவர்களுக்குப் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து ஹாரன் அடிக்கிறார்கள் அல்லது அவர்களை முந்துகிறார்கள். இந்த விதிகளை மீறுபவர்களைப் பார்த்து, மற்றவர்களும் விதியை மீறுகிறார்கள் என்றார்.

ஏஎன்ஆர்பி கேமராக்கள்: கான்பூர் ஐஐடியைச் சேர்ந்த கவிஷ் கர்க் இதுபற்றி கூறும் போது, கொல்கத்தாவில் உள்ளது போல் இந்த மீறல்களைக் கண்டறியும் அதிக தானியங்கி நம்பர் பிளேட் அங்கீகாரம் (ANPR) கேமராக்கள், விதிமீறல்களைச் சரிபார்க்க அமலாக்க அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றப்பட வேண்டும் என்றார்.

A mega project is ready for trouble if it crosses the red signal in Chennai

இதனிடையே தினமும் சுமார் 3,000 போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கபில் குமார் சி சரத்கர் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், 3000 வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு கேமராக்கள் மூலம் கண்டறியப்படுகிறது, மீதமுள்ளவை வாராந்திர சிறப்பு குழுக்கள் மூலம் கண்டறியப்படுகின்றன. எங்கள் கான்ஸ்டபிள்கள் மீறல்களின் புகைப்படங்களைக் கிளிக் செய்கிறார்கள் அதன் மூலம் நடவடிக்கை எடுக்கிறோம். சமூக ஊடகங்களில் குடிமக்கள் பகிரும் புகைப்படங்களின் அடிப்படையில் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் "என்று அவர் கூறினார்.

45000 வாகன ஓட்டிகள்: சென்னையில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஏஎன்பிஆர் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 200 வாகனங்களை நிறுவ போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே சிக்னலை மீறி செல்வது மற்றும் ஸ்டாப்லைன் மீறல்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை பத்து மடங்கு அதிகரித்துள்ளது. ஒவ்வொரு மாதமும், 45,000 வாகன ஓட்டிகள் இந்தக் குற்றங்களுக்காக தலா ₹500 அபராதமாகச் செலுத்துகின்றனர்.

பள்ளிப்பாடம்: திருவனந்தபுரத்தில் உள்ள மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தை (C-DAC) சேர்ந்த பி ரவிக்குமார் கூறுகையில், கேமராக்கள் வேலை செய்தாலும் இல்லாவிட்டாலும், வாகன ஓட்டிகளுக்கு உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் மாற்றம் ஒரே இரவில் நடக்க முடியாது.
சாலை விதிகளை கடைபிடிப்பதை பள்ளி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாற்றி குழந்தைகளிடம் புகுத்த வேண்டும். தற்போது, போலீஸ்காரர் இல்லாத போது, அத்துமீறுவது மக்களின் கலாசாரமாக உள்ளது என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+