கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்.. குன்றத்தூரில் சோகம்!

திருவள்ளூரில் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் தப்பியோடிய தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    2 குழந்தைகளை கொன்று கள்ளக்காதலனுடன் ஓடிப்போன தாய்- வீடியோ

    திருவள்ளூர்: குன்றத்தூர் அருகே இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

    குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் விஜய்(30). தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி அபிராமி, இவர்களுக்கு திருமணம் ஆகி அஜய் என்ற 7 வயது மகனும் கார்னிகா என்ற 4 வயது மகளும் இருந்தனர். அஜய் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.

    காலையில் வந்த கணவர்

    காலையில் வந்த கணவர்

    இந்த நிலையில் நேற்று மாத கடைசி என்பதால் விஜய் இரவு வீட்டிற்கு வராமல் அலுவலகத்திலேயே தங்கி விட்டார். இன்று அதிகாலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு வெளிப்புறம் சாத்தப்பட்டு இருந்தது.

    அலறிய தந்தை

    அலறிய தந்தை

    கதவை திறந்து பார்த்த விஜய், இரண்டு பிள்ளைகளும் வாயில் நுரை தள்ளியபடி கட்டிலில் இறந்து கிடப்பதைக்கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார். அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டனர்.

    மனைவி மாயம்

    மனைவி மாயம்

    மேலும் வீட்டில் இருந்த விஜயின் மனைவி கனிமொழி மாயமாகியிருந்தார். இதைத்தொடர்ந்து குன்றத்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடல்கள் மீட்பு

    உடல்கள் மீட்பு

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    கள்ளக்காதலனுடன் ஓட்டம்

    கள்ளக்காதலனுடன் ஓட்டம்

    இதில் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், அபிராமிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. இதனால் நேற்று இரவு குழந்தைகளுக்கு விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு அவர் தனது கள்ளக்காதலனுடன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

    தனிப்படை அமைப்பு

    தனிப்படை அமைப்பு

    மேலும் வேறு காரணம் ஏதும் உள்ளதா என விசாரித்து வரும் போலீசார், அபிராமியை கைது செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும் என தெரிவித்துள்ளனர். அபிராமியை கைது செய்ய போரூர் உதவி ஆணையர் தலைமையில் 3 ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    செல்போன் ஆய்வு

    செல்போன் ஆய்வு

    முதல் கட்டமாக அவரது கனவர் விஜயிடம் விசாரணை மேற்கொண்டுள்ள காவல்துறையினர் அபிராமியின் நண்பர்கள், உறவினர்களை விசாரித்து விசாரிப்பதோடு செல்போன் தொடர்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    குழந்தைகளை கொன்று

    குழந்தைகளை கொன்று

    இரண்டு குழந்தைகளை பெற்ற தாயே விஷம் வைத்து கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிப்போன சம்பவம் குன்றத்தூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+