ஷாக்கிங்.. குழந்தைகள் துடிதுடித்து இறந்ததை உறுதி செய்தபின் கள்ளக்காதலனுடன் பைக்கில் கிளம்பிய அபிராமி
குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் தப்பியோடிய விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

திருவள்ளூர்: குன்றத்தூரில் இரண்டு குழந்தைகளை கொலை செய்து விட்டு தாய் கள்ளக்காதலனுடன் தப்பியோடிய விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் குன்றத்தூரை சேர்ந்த விஜய் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அபிராமி.
இந்த தம்பதிக்கு அஜய் என்ற மகனும் கார்னிகா என்ற மகளும் உள்ளனர். அபிராமிக்கு அப்பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

அடிக்கடி தகராறு
கள்ளத்தொடர்பை கைவிடக்கோரி விஜய் பலமுறை கூறியும் அதனை ஏற்க மறுத்துள்ளார் அபிராமி. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

குடும்பத்தை கொல்ல திட்டம்
இந்நிலையில் கணவர் மற்றும் குழந்தைகளை கொன்றுவிட்டு சுந்தரத்துடன் புதிய வாழ்க்கையை தொடங்க திட்டமிட்டார் அபிராமி. ஆனால் நேற்றிரவு பணி காரணமாக கணவர் விஜய் அலுவலகத்திலேயே தங்கியுள்ளார்.

குழந்தைகளுக்கு விஷம்
இதனை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அபிராமி, கள்ளக்காதலன் சுந்தரத்துடன் சேர்ந்து இரண்டு குழந்தைகளுக்கும் தேனீரில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.

நுரை தள்ளி பலி
தேனீரில் விஷம் உள்ளது என்பதை அறியால், தாய் கொடுத்ததை ஆசையாய் வாங்கி பருகிய இரண்டு குழந்தைகளும் சற்றுநேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து உயிரிழந்தனர்.

பைக்கில் புறப்பட்டார்
குழந்தைகள் துடிதுடித்து உயிரிழந்ததை உறுதி செய்த அபிராமி, காத்திருந்த கள்ளக்காதலன் சுந்தரத்துடன் பைக்கில் ஏறி புறப்பட்டார். இரவோடு இரவாக கோயம்பேட்டில் வண்டியை பார்க் செய்துவிட்டு நாகர்கோவில் சென்றது கள்ளக்காதல் ஜோடி.

கணவருக்கும் தேனீர்
இந்நிலையில் சுந்தரத்தை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள அபிராமியை தேடி வருகின்றனர். புறப்படும் முன்பாக அபிராமி கணவருக்கும் தேனீரில் விஷம் கலந்து வைத்துவிட்டு சென்றுள்ளார்.

பெரும் அதிர்ச்சி
அதை அவர் குடிக்காததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண் காம வெறியில் குழந்தைகளை கொன்று விட்டு கணவரையும் கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications