இந்திய ராணுவம், ராஜீவ் காந்தி படுகொலை குறித்த சீமானின் ஆவேச பேச்சால் வெடித்தது சர்ச்சை!
உடுமலைப்பேட்டை: இந்திய ராணுவம் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
உடுமலைப்பேட்டையில் மொழிப்போர் தியாகிகள் நாள் பொதுக் கூட்டத்தில் சீமான் நேற்று பேசியதாவது: திம்பு பேச்சுவார்த்தைக்கு இந்திய ராணுவம் வா என அழைத்து டெல்லி அசோகா ஹோட்டலில் ஒரு மாதம் பிரபாகரனை சிறை வைத்தது. ராணுவ தளபதி மிரட்டுறார். சிகரெட்டை புகைத்து சாம்பலை நசுக்கிக் கொண்டு இது போல உங்களை நசுக்குவோம் என்றார். உங்களது 2 குழந்தைகளை பற்றி நினைக்க வேண்டும் என்றார். ஆனால் பிரபாகரனோ நீங்களும் ராணுவத்தில் இருக்கிறீர்கள். நானும் ராணுவத்தில் இருக்கிறேன். உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது.. எனக்கும் பிள்ளைகள் இருக்கின்றன என்றார்.

இந்திய ராணுவம் மீது விமர்சனம்: பெரிய இந்திய ராணுவம்..... யா? அப்படித்தான் ராஜீவ் காந்தி.. 2,000 பொடியன்கள்.. நான் துணைக் கண்டனத்தின் அதிபதி என்றார். எந்த கொம்பாதி கொம்பனாக இருந்தாலும் என் இனத்தைத் தொட்டால் உன்னை தூக்குவேன்டா.. எவ்வளவு பெரிய.. இரு. உலகத்தில் எத்தனை பெரிய குற்றத்துக்கும் ஒரே தண்டனை மரண தண்டனைதான்.
மெரினா சமாதிகள்: நாம் தமிழர் ஆட்சியில் சென்னை மெரினா கடற்கரையில் மொழிப்போர் தியாகிகளுக்கு நினைவிடம் கட்டுவோம். எப்படி வைக்கிறேன் பாரு.. ஆனால் நீ வைக்கும் சமாதி எந்த இடத்துக்கு போகும் என எவனுக்கும் தெரியாது. இது என் நிலம். இது என் நாடு. என் இன அடையாளம்தான் மேலோங்கி நிற்கும். எங்கு திரும்பினாலும் தமிழ், தமிழர் அடையாளம்தான் இருக்கும்.
இந்தி ஒழிக என்பது கோட்பாடு அல்ல: இந்திக்கு எதிரான மொழிப் புரட்சி அல்ல.. இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப் புரட்சி இங்கு நடந்தது. நாம் உலகின் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல இந்தி உட்பட. நம்முடைய கோட்பாடு இந்தி ஒழிக என்பது அல்ல. தமிழ் வாழ்க என்பதுதான். நான் ஏன் அவர்களது அம்மா ஒழிய வேண்டும் என சொல்ல வேண்டும்? அவன் மொழி அழிய வேண்டும் என நான் ஏன்டா சொல்லனும்? என் மொழி வாழனும்.. என் மொழியை காக்கனும் அதான் என் கோட்பாடு. என் மொழியை சாகாமல் காக்க வேண்டும். அதுதான் கோட்பாடு.

சமஸ்கிருத மாநிலம் இருக்கிறதா?: இந்தியாவில் மொழிவழியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் சமஸ்கிருதத்துக்கு என ஏதாவது ஒரு மாநிலம் பிரிக்கப்பட்டதா? கோவிலில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓதுகிறவர்கள் கூட அவர்களுக்குள் சமஸ்கிருதத்தில் பேசிக் கொள்வதில்லை. இந்திய அரசு தெரிவித்த புள்ளி விவரப்படியே 22,000 பேர்தான் சமஸ்கிருதம் பேசுகின்றனர். ஆனால் மடாலயங்கள், ஆசிரமங்களில் சமஸ்கிருதம் கட்டாயமாக கற்பிக்கப்படுகிறது. இவ்வாறு சீமான் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications