விருதுநகர் மாவட்ட ஆட்சியராக சிவஞானம் ஐ.ஏ.எஸ் நியமனம்
சென்னை: விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ள சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார். சிவஞானத்தை விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமித்து தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் தஞ்சை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாவட்ட ஆட்சியராக இருந்த கோவிந்தராஜ் கரூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி மண்டல துணை கமிஷனர் அண்ணாதுரை, தஞ்சை கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனராக (கல்வி) இருந்த அசியா மரியம் நாமக்கல் கலெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன், கடலூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி துணைக்கமிஷனர் டி.ஜி. வினய் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமன் நகராட்சி நிர்வாக இணைக்கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''தமிழக இணை தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஏ.சிவஞானம், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்'' என கூறியுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications