அலங்காநல்லூரில் 3வது நாளாக ஜல்லிக்கட்டு போராட்டம்.. பெண் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அலங்காநல்லூரில் மூன்றாவது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெண் ஒருவர் திடீரென மயங்கிய விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to Oneindia Tamil
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக்கோரி அலங்காநல்லூரில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் மூன்றாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி, ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் தொடந்து மூன்றாவது நாளாக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் இன்று திடீரென மயக்கமடைந்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டம் ஒவ்வொரு வினாடியும் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications