தொடரும் உயிரிழப்புகள்.. தூத்துக்குடி அருகே கந்துவட்டி தொல்லையால் இளைஞர் தற்கொலை!
கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி: கந்துவட்டி கொடுமையால் தூத்துக்குடி அருகே இளைஞர் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கந்துவட்டி தொல்லையால் இசக்கி முத்து என்பவர் கடந்த மாதம் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்து உயிரிழந்தார், இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் நடக்கும் கந்து வட்டி கொடுமைகள் வெளிச்சத்துக்கு வர தொடங்கியுள்ளன.

அண்மையில் நடிகர் சசிகுமாரின் மைத்துனர் அசோக்குமார் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கொடுத்த கடன் நெருக்கடியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து கந்துவட்டிக்கு எதிரான குரல் வலுத்துள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கந்துவட்டிக்காரரின் மிரட்டலால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். லாயல் காலனியில் உள்ள கிணற்றில் குதித்து மாரீஸ்வரன் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டார்.
உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மாரீஸ்வரனுக்கு கடன் கொடுத்தவர் யார் மிரட்டல் விடுத்தவர் யார் என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் தொல்லையால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications