வீடு இடிப்பு பணியின் போது விபத்து.. சுவர் விழுந்து இளைஞர் பலி
நெல்லை அருகே வீடு இடிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
நெல்லை: வீடு இடிப்பு பணியின் போது எதிர்பாராத விதமாக சுவர் இடிந்து விழுந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலப்பாளையம் ஆமீன் புரம் 5வது தெருவில் ஒரு வீட்டை இடிக்கும் பணி இன்று காலை நடைபெற்றது. இதில் அப்பகுதி தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரத விதமாக சுவர் இடிந்து கோதர் என்ற தொழிலாளி மீது விழுந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுதொடர்பான மீட்புப்பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டன. இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.













Click it and Unblock the Notifications