மக்கள் நலக் கூட்டணியில் இணைகிறது கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி
சென்னை: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, மக்கள் நலக் கூட்டணியில் இணைகிறது. தமிழக சட்டசபைத் தேர்தலையும் வைகோ தலைமையிலான கூட்டணியின் கீழ் சந்திக்கவுள்ளது.
தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது மக்கள் நலக் கூட்டணி. இக்கூட்டணிக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தர ஆரம்பித்துள்ளனர். மேலும் இக்கூட்டணியின் பிரசாரமும் தொடங்கி விட்டது.
இக்கூட்டணியின் தலைவர்கள் போகும் இடமெல்லாம் நல்ல கூட்டம் வருகிறது. மக்களிடையேயும் இந்தக் கூட்டணிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகளையும் இக்கூட்டணியில் சேர்க்க முயற்சிகள் நடந்த வருகின்றன. இந்த நிலையில் இக்கூட்டணியில் ஆம் ஆத்மி இணையவுள்ளது.
கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி டெல்லியில் ஆட்சியைப் பிடித்து சாதனை படைத்த கட்சி. தற்போது அது மக்கள் நலக் கூட்டணியில் இணையவுள்ளது எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.
டெல்லியிலிருந்து மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுடன் பேச்சு நடத்த ஆம் ஆத்மி தலைவர் சோம்நாத் பாரதி வந்துள்ளார். இன்று அவர் வைகோவை சந்தித்துப் பேசவுள்ளார்.
தற்போது மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications