2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை உதறிய அபிராமி
Recommended Video

சென்னை: வெறும் 2 மாத கள்ளக்காதலுக்காக 8 ஆண்டுகளாக குடும்பம் நடத்திய காதலனை அபிராமி உதறியுள்ளார்.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

காதல் திருமணம்
இதையடுத்து திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்ற அபிராமியை நாகர்கோவிலில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறுகையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நானும் விஜய்யும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.

தாய் வீட்டுக்கு செல்வது
நாங்கள் சென்னையில் உள்ள குன்றத்தூரில் குடி பெயர்ந்தோம். நான் அப்பகுதியில் உள்ளவர்களுடன் நன்றாக பேசுவதை வைத்து விஜய்க்கு என் மீது சந்தேகம் இருந்தது. இதனால் நாங்கள் இருவரும் அடிக்கடி சண்டையிடுவதும் கோபித்து கொண்டு நான் தாய் வீட்டுக்கு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

பழக்கம்
இந்நிலையில்தான் குழந்தைகளுடன் குன்றத்தூர் பகுதியில் பிரியாணி கடைக்கு சென்ற போது அங்கு சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு ஆறுதலை தந்தது. இதனால் அவ்வப்போது அவரது கடைக்கு சென்று விடுவேன். இதையடுத்து எங்களுக்குள் நெருங்கி பழகும் அளவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

குழந்தைகளை கொன்றேன்
இதனால் குடும்பத்தை விட முடிவு செய்தேன். காதல் கணவருடன் 8 ஆண்டுகள் குடும்பம் நடத்தியபோதும் சுந்தரத்துடனான 2 மாத கள்ளக்காதலை விட முடியவில்லை. இதனால் சுந்தரத்துடன் எப்படி வாழ்வது என்று யோசித்த போது கணவரையும் குழந்தைகளையும் கொன்றுவிடும்படி அவர்தான் எனக்கு ஐடியா கொடுத்தார். இதற்கு நானும் ஒப்புக் கொண்டு குழந்தைகளை கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications