அபிராமியின் அதிர வைக்கும் பிளான்.. கணவரையும் போட்டுத் தள்ள திட்டமிட்டிருந்தது அம்பலம்!
Recommended Video

சென்னை: திருவள்ளூரில் அருகே குன்றத்தூரில் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்ற விவகாரத்தில் கணவனையும் கொல்ல திட்டமிட்டது அம்பலமானது.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி அபிராமி (25). இவர்களுக்கு அஜய், கார்னிகா என்ற இரு குழந்தைகள் இருந்தனர்.

சுவிட்ச் ஆப்
இந்நிலையில் விஜய் நேற்று இரவு வங்கியில் பணி காரணமாக வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து அவர் இன்று அதிகாலை வீட்டுக்கு சென்றார். அப்போது கதவை திறக்குமாறு மனைவிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

போலீஸார் விசாரணை
இதையடுத்து அவர் கதவை தட்ட முயன்ற போது கதவு திறந்திருந்தது தெரியவந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரு குழந்தைகளும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

சுந்தரம் கைது
இந்நிலையில் வீட்டில் அபிராமியும் அவரது இரு சக்கர வாகனமும் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து அபிராமியை தேடுவதற்காக தனிப்படை அமைத்து போலீஸார் தேடி வந்தனர். இதனிடையே அபிராமிக்கு குன்றத்தூர்- போரூர் நெடுஞ்சாலையில் பிரியாணி கடையில் பணியாற்றும் சுந்தரம் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.

அபிராமியும்
இதையடுத்து போலீஸார் சுந்தரத்தை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்களை கூறியுள்ளார். அதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் இரு குழந்தைகளையும் கணவரையும் கொல்வதற்காக சுந்தரமும், அபிராமியும் திட்டமிட்டுள்ளனர்.

குழந்தைகளுக்கும் விஷம்
அதன்படி சுந்தரம் நேற்று இரவு விஷத்தை வாங்கி அபிராமியிடம் கொடுத்துள்ளார். அவரும் குழந்தைகளுக்காக உணவிலும், கணவருக்காக தேனீரிலும் கலந்து விட்டார். இந்நிலையில் பணி காரணமாக இரவு வீட்டுக்கு வர இயலாது என்று விஜய் கூறிவிட்டதால் குழந்தைகளுக்கு உணவில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார்.

கோயம்பேட்டுக்கு சென்ற அபிராமி
இதில் இருவரும் உயிருக்கு போராடி துடிதுடித்து இறந்தனர். இதையடுத்து இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு கோயம்பேட்டில் விட்டுவிட்ட அபிராமி அங்கிருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பேருந்தில் சென்றுவிட்டார். இவர்களது திட்டப்படி முதலில் நாகர்கோவிலுக்கு அபிராமி சென்றுவிட்டு பிறகு அங்கு சுந்தரம் வந்தவுடன் இருவரும் சேர்ந்து வாழ்வது என்பது ஆகும். இதையடுத்து அபிராமியை பிடிக்க தனிப்படை போலீஸார் நாகர்கோவிலுக்கு விரைந்தனர்.












Click it and Unblock the Notifications