ஜில்லா படப்பிடிப்பில் வெடி விபத்து: விஜய்- லால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர், 5 பேர் காயம்
சென்னை: ஜில்லா படப்பிடிப்பின் போது திடீர் என்று வெடி விபத்து ஏற்பட்டது. இதில் விஜய்யும், மோகன்லாலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பொங்கலுக்கு ரிலீஸாகும் ஜில்லா படத்தில் வரும் அறிமுக பாடலை உடுமலைப்பேட்டை அருகே உள்ள திருமூர்த்தி அணைக்கட்டில் படமாக்கினர். இந்த பாடலுக்காக பிரமாண்ட செட் போடப்பட்டிருந்தது.
கோவில் திருவிழாவில் ஆடுவது போன்று பாடல் அமைக்கப்பட்டதால் கோவில், தேர், மண்டபங்கள், கடை வீதிகள் என்று கலக்கலாக செட் அமைக்கப்பட்டிருந்தது.

விஜய், லால்
சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடா எதிர்த்து நின்னவன் தூசுடா என்ற பாடலுக்கு விஜய், மோகன்லால் ஆகியோர் ஆடினர். அங்கு படத்தின் நாயகி காஜல் அகர்வால், பூர்ணிமா பாக்யராஜ், மகத், சூரி, தம்பி ராமையா மற்றும் நூற்றுக்கணக்கான நடனக் கலைஞர்கள் இருந்தனர்.

வாத்திய கலைஞர்கள்
இந்த பிரமாண்ட அறிமுக பாடலுக்காக தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த வாத்திய கலைஞர்களும் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அந்த இடம் முழுவதும் கலைஞர்கள் கூட்டமாக இருந்தது.

வெடி விபத்து
விஜய்யும், மோகன்லாலும் ஆடுகையில் பல வண்ணங்களில் வான வேடிக்கை நடைபெறும் காட்சியை படமாக்கினர். அப்போது வான வேடிக்கை நடத்த வைத்திருந்த வெடிகள் திடீர் என்று தானாக வெடித்துச் சிதறின.

5 பேர் காயம்
இந்த வெடி விபத்தில் 5 பேர் காயம் அடைந்தனர். ஹீரோ விஜய்யும், மோகன்லாலும் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி தப்பினார்கள். இந்த சம்பவத்தை அடுத்து உடனே படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

மீண்டும் படப்பிடிப்பு
வெடி விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். சிறிது நேரம் கழித்து படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடந்தது.
-
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் கல்யாணத்திற்காக முதல்வர் விஜய்யை சந்தித்த குஷ்பு குடும்பம்.. வெளியே வந்ததும் உருக்கமான பதிவு -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
அண்ணாமலைக்கு, விஜய் கொடுத்த நம்பிக்கை! பாஜகவிற்கு ‘குட்பை' கூறி புது கட்சி தொடங்குவது ஏன்? பின்னணி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம்












Click it and Unblock the Notifications