மன்னிக்க முடியாத குற்றம்.. எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை.. தமிழிசை அதிரடி
எஸ்.வி சேகர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் உறுதியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை : பெண் பத்திரிகையாளர்களைப் பற்றி தவறாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி.சேகர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பெண் பத்திரிகையாளர் ஒருவரின் கன்னத்தில் தட்டிய விவகாரம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர்கள் ஆளுநருக்கு எதிரான கருத்தை பதிவு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த பாஜகவைச் சேர்ந்த எஸ்.வி சேகர், பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பதிவிட்டு இருந்தார் . இதனால், எஸ்.வி சேகருக்கு எதிராக பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், எஸ்.வி சேகர் பெண்கள் பற்றி தெரிவித்து இருக்கும் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர் மீது கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு வருகிறோம். தவறான கருத்துகளைப் பரப்புவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சமூக வலைத்தளங்களில் கருத்தை தெரிவித்துவிட்டு, அதை நான் எழுதவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மன்னிக்க முடியாத குற்றம். சமூக வலைத்தளத்தில் ஒருமுறை தப்பான கருத்தை கூறிவிட்டாலும், அது பரவிக் கொண்டேதான் இருக்கும்.
தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான அரசியல் சூழல் வர வேண்டும் என்று பாஜக நினைப்பதாகவும், பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு இருப்பவர்கள் தவறான கருத்துகளை பரப்பக் கூடாது. இவ்வாறு தமிழிசை தெரிவித்தார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்









Click it and Unblock the Notifications