நடிகர் பாலாஜி மீது மனைவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி நித்யா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் பாலாஜி (43), இவருடைய மனைவி நித்யா (30). இருவருக்குமே 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

Actor Balaji's wife Nithya filed complaint against his husband

இதனால் பாலாஜியின் மனைவி மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பாலாஜி தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், பாலாஜி மீது அவருடைய மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனுவை ஒன்றை அளித்துள்ளார்.

Actor Balaji's wife Nithya filed complaint against his husband

ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நித்யா, இன்று ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.

ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பாலாஜி தன்னை திருமணம் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார் நித்யயா. பலபேருடன் தொடர்பு படுத்தி பேசி சித்ரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Actor Balaji's wife Nithya has filed a complaint at the Chennai Police Commissioner's office against his husband.
Please Wait while comments are loading...