கமல் நெற்றியில் இருப்பது விபூதியல்ல... மேக்கப் தான்: எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்
சென்னை: நடிகர் கமல் நெற்றியில் விபூதியுடன் காணப்படும் புகைப்படம் தொடர்பாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், ‘கமல் நெற்றியில் இருப்பது மேக்கப் தான் எனத் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் வெற்றிநடைப் போட்ட த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் தயாராகி வருகிறது. இப்படத்தின் நாயகனாக கமலும், அவரது மனைவியாக கௌதமியும் நடித்து வருகின்றனர்.
கடந்தவாரம் தென்காசி பேருந்து நிலையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தற்போது தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்படத்தின் நடந்து வருகிறது.
இந்நிலையில், நெற்றியில் விபூதியுடன் நாங்குநேரி ஸ்ரீ வானமாமலை மட ஜீயரை கமல் சந்திப்பது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பாக தழல் முடியரசன் என்பவர் எழுப்பியுள்ள வினாவிற்கு தனது வலைதளப்பக்கத்தில் பாபநாசம் திரைப் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத் தாளர் ஜெயமோகன் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது :-

மேக்கப்...
படத்தை இன்னொரு முறை பாருங்கள். கமல் நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார். விபூதி அல்ல மேக்கப். பாபநாசம் படத்தில் வரும் சுயம்புலிங்கத்தின் தோற்றம்

நானும் அங்கிருந்தேன்...
வானமாமலை ஆலயத்தில் படப்பிடிப்பு நடந்தபோது நானும் அங்கிருந்தேன். அது நான் எழுதும் படம்.

அனுமதி கோரினோம்...
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஆலயத்திலும் படப்பிடிப்புக்கு அனுமதி இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள். நான்குநேரி வானமாமலை ஆலயத்தில் வெளிப்பிராகாரத்தில் சில பகுதிகள் மட்டும் மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ளவை. ஆகவே அங்கே படப்பிடிப்பு நடத்த கோரினோம்.

மரியாதை நிமித்த சந்திப்பு...
ஜீயர் அவர்கள் அனுமதி அளித்தார். அங்கே படப்பிடிப்பு நடந்தபோது ஜீயரைச் சென்று சந்தித்து மரியாதை செலுத்தினார் கமல். அந்தப்படம்தான் அது.

நாத்திகர் என்றால்...
நாத்திகர் என்றால் மரியாதை தெரியாதவர் என நான் நினைக்கவில்லை. நீங்கள் ஏன் நினைக்கவேண்டுமென புரியவில்லை.

விபூதி பூசிய பெரியார்...
முன்பு ஒரு காலத்தில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகளைக் காண ஈவேரா சென்றிருந்தார். திரும்பும்போது அவர் அளித்த விபூதியை நெற்றியில் அணிந்துகொண்டார். படம் கூட வெளியாகியிருக்கிறது" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications