2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் உறுதி- நாசர் தகவல்- Exclusive
இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நாசர் தெரிவித்தார்.
சென்னை: இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உறுதி அளித்தார் என நடிகர் நாசர் தெரிவித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆளுநர் பன்வாரிலால் உறுதியளித்திருந்தார். இந்நிலையில் ஆளுநரை முதல்வரும், துணை முதல்வரும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சந்தித்தனர்.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. மேலும் தமிழக அரசு தொடர்ந்த சீராய்வு மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.

5000 பேர் பங்கேற்பு
இந்நிலையில் நடிகர் சங்கத்தினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் சந்திப்பு குறித்து ஒன்இந்தியா தமிழ் செய்தியாளர் கேட்டபோது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திரையுலகம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம்
அவர்கள் கையெழுத்திட்டு கொடுத்த மனுவை ஆளுநரிடம் அளித்தோம். அதுகுறித்து முதல்வருக்கு குறிப்பு அனுப்புவதாக ஆளுநர் தெரிவித்தார். இன்னும் 2 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்றும் அவர் கூறினார் என்றார் நாசர்.

முதலில் பார்ப்போம்
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக மத்திய அரசு காலம் கடத்தி வருகிறதே .இதை எதிர்த்து என்ன போராட்டம் நடத்தப் போகிறீர்கள் என்று நாசரிடம் கேட்டபோது, முதலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். பிறகு போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.

நல்லவிதமான நடவடிக்கை
தீர்வு நல்லதாக அமையும் என்றே நம்புகிறேன். நல்ல தீர்வு காணத்தான் போராட்டமும் நடத்தினோம். நல்லவிதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் நாசர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications