கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் - நடிகர்கள் விஷால், வடிவேல் நலம் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நடிகர்கள் விஷால், வடிவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல்நிலை குறித்து நடிகர்கள் விஷால், வடிவேல் இன்று மாலை நலம் விசாரித்தனர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வந்த கருணாநிதி, கடந்த 1ம் தேதியன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவார கால சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 7ம் தேதி வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமையன்று இரவு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் அவரை பரிசோதித்த போது தொண்டை, நுரையீரலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அதை சரிசெய்ய ட்ரக்கியோஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் நடிகர்கள் விஷால், வடிவேல் ஆகியோர் இன்று மாலை காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதி உடல்நலம் விசாரித்தனர். பின்னர் மருத்துவமனை வளாகத்தில் இருவரும் கூட்டாக செய்தியாளார்களை சந்தித்தனர். அப்போது வடிவேல் கூறியதாவது: திமுக தலைவர் கருணாநிதி நலமாக உள்ளார். இன்னும் 2 நாட்களில் வீடு திரும்புவார். அவர் நலம் பெற இறைவனை பிரார்த்திகிறேன். மூத்த தலைவர் கருணாநிதி பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என வடிவேல் கூறினார். கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நடிகர் விஷால் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications