நைட்டியோடு நடு ரோட்டில் சண்டை போட்ட வனிதா.. போலீசை வைத்து விரட்டியடித்த விஜயகுமார்
Recommended Video

சென்னை: நடிகர் விஜயகுமார் அளித்த புகாரின்பேரில், அவரது வாடகை வீட்டில் வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வனிதா மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியது.
நடிகர் விஜயகுமாருக்கும், அவரது மகள் வனிதாவுக்கும் இடையே ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள வீடு தொடர்பான பிரச்சனை நீடித்து வருகிறது.
நடிகர் விஜயகுமார் - நடிகை மஞ்சுளா தம்பதிக்கு வனிதா, ப்ரீத்தா, ஸ்ரீதேவி என 3 மகள்கள் உள்ளனர். மஞ்சுளா சமீபத்தில் மரணமடைந்த பிறகு, வனிதாவிற்கும், விஜயகுமாருக்கும் மோதல் ஏற்பட்டது.

வீடு பிரச்சினை
விஜயகுமாருடன் மட்டுமின்றி, வனிதாவிற்கும், பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்து வருகிறது. இந்த நிலையில் மஞ்சுளா பெயரில், ஆலப்பாக்கம் அஷ்டலஷ்மி நகரில் வீடு உள்ளது. சினிமா படப்பிடிப்பிற்கு இந்த வீடு வாடகைக்கு விடப்படும். இந்த வீட்டில் சில நாட்களுக்கு முன்பு படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று வனிதா வாடைக்கு எடுத்ததாகவும், ஆனால் வீட்டை காலி செய்ய மறுப்பதாகவும், மதுரவாயல் காவல் நிலையத்தில் விஜயகுமார் புகார் அளித்தார்.

இரவு அதிரடி
மஞ்சுளா பெயரில் இருக்கும் இந்த வீட்டை தன்னுடையது என கூறி வனிதா பிரச்சனை செய்வதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி நேற்று இரவு வனிதாவை வீட்டிலிருந்து கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வனிதாவுடன் தங்கியிருந்த நண்பர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வனிதா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

மீடியாக்கள் உதவி
வனிதா தங்கியிருந்த வீட்டில் நேற்று மாலை செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களிடம் பேச மறுத்த அவர், படம் பிடிக்க விடாமல் கேமராவை பறிக்க முயன்றார். நைட்டியுடன் நடு ரோட்டில் சண்டை போட்டார். ஆனால், இரவு போலீசார் அவரை வெளியேற்றிய பிறகு ஊடகத்தினர் தயவை நாடிய வனிதா, தான்தான் தனது அம்மா சொத்தின் வாரிசு என்று கூறினார் வனிதா.

எங்கே செல்வது
போலீஸ் இன்ஸ்பெக்டர் தன்னை அடித்துவிட்டதாகவும், இப்போது போக்கிடம் இல்லாமல் தெருவில் நிற்பதாகவும் உருக்கமாக பேட்டியளித்தார் வனிதா. இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications