ஜெயலலிதாவுடன் கவுதம் அதானி சந்திப்பு.. சோலார் திட்டம் பற்றி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இன்று சந்தித்தார்.
தலைமைச் செயலகத்தில் வைத்து இந்த சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, தொழில் துறை அமைச்சர் தங்கமணி, அதானி நிறுவன மேலாண் இயக்குநர் ராஜேஷ் அதானி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.4536 கோடி திட்ட மதிப்பில், சோலார் மின் உற்பத்தி நிறுவனம் தொடங்க உள்ள திட்டம் பற்றி ஜெயலலிதாவுடன், கவுதம் அதானி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த மின் உற்பத்தி நிறுவனத்தில் 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக்கு பிறகு வெளியே வந்த கவுதம் அதானி, மீடியாக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.












Click it and Unblock the Notifications