உள்ளாட்சித் தேர்தலில் போட்டிய அதிமுக விருப்ப மனு - வார்டுகள் அறிவிக்கப்படாததால் பலர் தயக்கம்
நெல்லை: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பவர்களிடம் அதிமுக சார்பில் விருப்ப மனு பெறுவது தொடங்கியுள்ளது. வார்டுகள் அறிவிக்கப்படாததால் பலர் தயக்கம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினருக்கு விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. ஓவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் அலுவலகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. வரும் 22ம் தேதி வரை அக்கட்சியினருக்கு விருப்ப மனு வழங்கும் வகையில் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மனுக்களை பெற்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விருப்ப மனுக்களை பெறும் அதிமுகவினர் அதில் கேட்கப்பட்டுள்ள 20 கேள்விகளுக்கும் முழுமையாக பதில் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பெயர், முகவரி தவிர்த்து கட்சியில் எந்த ஆண்டில் இருந்து உறுபபினர்களாக உள்ளீர்கள், அதிமுகவில் இருந்து எப்போதாவது நீக்கம் செய்யப்பட்டுள்ளீர்களா? கட்சி ஓழுங்கு நடவடிக்கையை எப்போது சந்தித்தீர்கள், போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற அனுபவம் உண்டா உள்ளிட்ட 20 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதில் எந்த வார்டு யாருக்கு என்ற விபரம் இன்னும் தெரியவில்லை. இதனால் பலர் விருப்ப மனு தாக்கல் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர்.
ஆண், பெண், பொது, தனி வார்டுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே விருப்ப மனுக்கல் தாக்கல் அதிகமாகும் என நிர்வாகிகள் தெரிவித்தனர். வரும் 20ம் தேதி விருப்ப மனுக்களை பெறுவதும், தாக்கல் செய்வதும் சூடு பிடிக்கும் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications