தன்னார்வலர்களை தாக்கி நிவாரணப் பொருட்களை பறித்த அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் மக்களுக்கு உதவும் தன்னார்வலர்களை தாக்கியும், நிவாரணப் பொருட்களில் பங்கு கேட்டும் அடாவடி செய்த அதிமுகவினர் மீது போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, கடலூர் மாவட்ட மக்களுக்கு பிற மாவட்ட, மாநில மக்கள் லாரி, லாரியாக நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரிகளை அதிமுகவினர் மறித்து அம்மா ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

மேலும் சில இடங்களில் லாரிகளில் உள்ள பொருட்களை எடுத்தும் சென்றுள்ளனர்.

எரிச்சல்

எரிச்சல்

வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லாரிகளில் நிவாரணப் பொருட்களை ஏற்றி வந்த தன்னார்வலர்கள் அதிமுகவினரின் அராஜகத்திற்கு பயந்து வேறு வழியில்லாமல் அவர்களை ஸ்டிக்கர் ஒட்ட விட்டுள்ளனர்.

இரக்கம் கொண்டு உதவி செய்பவர்களின் பணிகளையும் அவர்கள் ஒழுங்காகச் செய்ய விட மாட்டார்கள். அது தான் அ.தி.மு.க.செய்தியாளர் :- அ.தி.மு.க. வினர் பல்வேறு இடங்களில், வெள்ள நிவாரணப் பொருள்களை யெல்லாம் தடுக்கிறார்கள். தொண்டு நிறுவனத்தினர் கொண்டு வருகின்ற பொருள்களையெல்லாம் தடுத்து அதிலே முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டி அனுப்புகிறார்கள். இதைப் பற்றி தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?பதில் :- இதைப் பற்றி நான் ஒன்றும் நினைக்கவில்லை. இப்படி நடந்து கொள்வது என்பது அவர்களுடைய சுபாவத்தைக் காட்டுகிறது. அவர்களும் உதவி செய்ய மாட்டார்கள்.#Chennaifloods

Posted by Kalaignar Karunanidhi on Tuesday, December 8, 2015

உணவு

சென்னையில் அதிமுக பெண் கவுன்சிலரின் கணவர் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்களுக்கு சமைத்து வைக்கப்ட்ட உணவில் தங்களுக்கு 200 பொட்டலங்கள் கேட்டு தன்னார்வலரிடம் அடாவடி செய்த வீடியோ சமூகவலைதளங்களில் வெளியானது.

தமிழ்ச்செல்வன்

தமிழ்ச்செல்வன்

சென்னை அண்ணா நகரில் உணவு சமைத்துக் கொண்டிருந்தவர்களிடம் 102வது வார்டு வட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன்(அதிமுக) 2,000 பொட்டலங்கள் கேட்டு தகராறு செய்தார். மேலும் உணவு தர மறுத்த தன்னார்வலர் ஒருவரை அதிமுகவினர் அடித்து நொறுக்கினர். இந்த வீடியோவும் ஃபேஸ்புக்கில் தீயாக பரவியது.

காவல்துறை

காவல்துறை

மக்களின் நண்பன் எனப்படும் காவல் துறை மக்களுக்காக உதவி செய்பவர்களை தாக்கி வரும் அதிமுகவினர் மீது இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. அவர்களை இதுவரை கைது செய்யவும் இல்லை. இது மக்களை வேதனை அடைய வைத்துள்ளது.

நீதிமன்றம்

நீதிமன்றம்

இதனால் நீதிமன்றமே தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து (suo moto), இது குறித்து விசாரணை நடத்தினால் தான் இனிமேல் இது போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் தன்னார்வலர்கள் பயமின்றி முழு மூச்சுடன் உதவிப் பணிகளில் ஈடுபட முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது.

புகார்

புகார்

நிவாரணப் பணிகளில் இடையூறு செய்யும் அதிமுகவினர் பற்றி கட்சி மேலிடத்திற்கு 044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அடாவடி செய்வோர் பற்றி அந்த எண்களில் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+