வாழ்க தீபா சின்னம்மா.. வாழ்க சசிகலா சின்னம்மா.. முத்துப்பேட்டை அதிமுகவில் கலகல!
எம்ஜிஆர் நினைவு தினத்தன்று அவரது சிலைக்கு மாலை போட வந்த அதிமுக தொண்டர்கள் சின்னம்மா சசிகலா வாழ்க என்று கோஷமிட்டதும் போட்டிக்கு சின்னம்மா தீபா வாழ்க என்று எதிர் கோஷமிட்டனர்.
திருவாரூர்: அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியானதில் இருந்து கூடவே ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமாருக்கும் ஆதரவு பெருகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுகவினர் அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டு எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்தினார்கள்.

அஞ்சலி நிகழ்வுகள் முடிவடைந்த உடன் அதிமுக தொண்டர்கள் சின்னம்மா சசிகலா வாழ்க என்று முழக்கமிட்டனர். இதனை ஏற்றுக் கொள்ள முடியாத தீபாவின் ஆதரவாளர்கள் பதிலுக்கு சின்னம்மா தீபா வாழ்க என்று கோஷமிட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தப் பிரச்சனை முத்துப்பேட்டை அதிமுக தொண்டர்களிடையே தகராறாக மாறிவிடுமோ என்ற நிலையில், அங்கு இருந்த மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலர் இருதரப்பையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதேப் போன்று பூந்தமல்லியில் உள்ள அதிமுக தொண்டர்கள், தீபாவிற்கு ஆதரவு தெரிவித்து நகரின் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்துள்ளனர். இது இந்தப் பகுதியில் உள்ள சசிகலா ஆதரவாளர்களுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications