நீங்க கொடுத்தா.. நாங்களும் கொடுப்போம்ல... கருணாநிதி ஊழல்.. பிட் நோட்டீஸ் போட்ட அதிமுக!
சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் அறிக்கைகளை சின்னதாக புக்காக போட்டு விநியோகித்த திமுகவினருக்குப் போட்டியாக அதிமுகவினரும் பிட் நோட்டீஸ் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.
பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக நீதிபதி மைக்கேல் டி குன்ஹா அளித்த தீர்ப்பு விவரத்தை விளக்கி திமுக தலைவர் கருணாநிதி தொடர் அறிக்கைகள் விடுத்திருந்தார். அதை புத்தக வடிவில் மாற்றி திமுகவினர் பொதுமக்களிடம் விநியோகித்தனர்.

இதற்குப் பதிலடியாக கருணாநிதியின் ஊழல் குறித்த துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் தயாரித்து மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கு சிறு சிறு மோதல்களும் நடந்தன.
இந்த நிலையில், சென்னையில் திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் சட்டசபைத் தொகுதி மாணவரணி பகுதி செயலாளர் வின்சட்ராஜ் தலையில் கருணாநிதி ஊழல் குறித்த துண்டு பிரசுரங்களை வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக மாவட்டசெயலாளர் வி.பி. கலைராஜன், எம்.பி.விஜயகுமார் ஆகியோர் பொதுமக்களிடம் வழங்கினர்.

இதில், தென்சென்னை வடக்கு மாவட்ட மாணவரனி செயலாளர் செந்தில் வேல், அப்துல் கறிம் (எ) பாபு, எம்.சி விஜயராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடைபாதை வியாபாரிகள், கண்ணில் பட்ட பொதுமக்கள் என சகலரிடமும் இந்த துண்டுப் பிரசுரங்களை அதிமுகவினர் வழங்கினர்.
-
எடப்பாடி மீது அதிமுக எம்எல்ஏக்களுக்கு நம்பிக்கை இல்லை! எரியுதடி மாலானு ஏன் புலம்புறீங்க? தவெக பதிலடி -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications