For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னை தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அதிமுக அஞ்சலி... தமிழகம் முழுவதும் கூட்டங்கள்

Google Oneindia Tamil News

ADMK to hold public meetings on anti hindi agitation day
சென்னை: இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது உயிர் துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜனவரி 25ம் தேதியன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து 1965 ஜனவரி 25ம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும். அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும். அன்னை தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 25.1.2014 சனிக்கிழமை அன்று கழக மாணவர் அணி சார்பாக, கழக அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் "வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்" நடைபெற உள்ளன.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் கழக நாளேடான 'டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.' நாளிதழில் வெளியிடப்படுகிறது. கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார்கள்.

மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்களுடனும், மாவட்டக் கழக நிர்வாகிகளுடனும், அறிவிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மாணவர் அணி நிர்வாகிகளுடனும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடனும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுடனும் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்களுடன் தொடர்பு கொண்டு பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்."

வீரவணக்க நாள் கூட்டத்தில் பேசுபவர்கள் பட்டியல்:

வடசென்னை வடக்கு மாவட்டம்- அவைத் தலைவர் மதுசூதனன், மகளிரணி செயலாளர் சசிகலா புஷ்பா.

வடசென்னை தெற்கு: அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன், மேயர் சைதை துரைசாமி.

தென் சென்னை தெற்கு: அமைப்பு செயலாளர்கள் சுலோச்சனா சம்பத் ஏ.கே.செல்வராஜ்.

தென் சென்னை வடக்கு: தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன், அமைப்புச் செயலாளர் கோகுல இந்திரா.

காஞ்சி மத்திய மாவட்டம்- ஓ.பன்னீர் செல்வம்.

காஞ்சீபுரம் கிழக்கு: மாணவரணி செயலாளர் விஜயகுமார், நடிகர் ராமராஜன்.

காஞ்சீபுரம் மேற்கு: மருத்துவ அணி தலைவர் டாக்டர் வா.மைத்ரேயன் எம்.பி., அமைச்சர் செந்தூர் பாண்டியன்.

திருவள்ளூர் தெற்கு: டாக்டர் வேணுகோபால் எம்.பி., பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம்.

திருவள்ளூர் வடக்கு: அமைச்சர்கள் பா.வளர்மதி, பி.வி.ரமணா, இளைஞர் பாசறை டாக்டர் கவிதா.

திண்டுக்கல் - அமைச்சர் நத்தம் விசுவநாதன். எம்.எஸ்.பாண்டியன்.

அரியலூர் - அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், வரகூர் அருணாசலம்.

கிருஷ்ணகிரி - அமைச்சர் கே.பி.முனுசாமி சதர்ன் என்.பிரபாகர்

வேலூர் புறநகர் மேற்கு: அமைச்சர் கே.சி.வீரமணி, எம்.ஜி.ஆர். நம்பி.

வேலூர் மாநகர் தலைமை செயற்குழு உறுப்பினர் பரிதி இளம்வழுதி, மேயர் கார்த்தியாயிணி, நடிகை வாசுகி, செம்மஞ்சேரி குணசேகரன்.

English summary
ADMK has announced a series of public meetings to honor the personalities who sacrificed their lives during anti hindi agitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X