'நண்பேன்டா'.... ஆளும் அதிமுக அரசுடன் கமுக்கமாக கை கோர்த்த திமுக- அம்பலப்படுத்திய ஓபிஎஸ்!
ஆளும் அதிமுக அரசுடன் கமுக்கமாக திமுக கைகோர்த்திருப்பதாக ஓபிஎஸ் சொல்வது உண்மைதானாம்.
சென்னை: ஆளும் அதிமுக அரசும் திமுகவும் கை கோர்த்திருப்பதாக ஓபிஎஸ் விமர்சித்தது உண்மையோ உண்மை என்கிறது கோட்டை வட்டாரங்கள்.
திமுக எம்.எல்.ஏக்கள் பலரும் கொங்கு அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டி வருகின்றனர். இது திமுக தலைமையை மிரள வைத்திருந்தது.

நிலைமை தலைகீழ்
அதிமுக அரசுடன் ரொம்பவே நெருக்கம் காட்டிய எம்.எல்.ஏக்களுக்கு திமுக தலைமையும் எச்சரிக்கை கொடுத்திருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறாகிவிட்டதாம்.

திமுகவுக்கு தூது
திமுக தலைமையின் கோபம் தொடர்பாக அதிமுக தரப்பில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் திமுக தலைமையையும் சரி செய்துவிட்டால் போச்சு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

நிபந்தனை
இதற்காக திமுக தலைமைக்கு மிக நெருக்கமான எம்.எல்.ஏ. மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாம். திமுக தரப்பில் என்ன கேட்டாலும் செய்து தர தயாராக இருக்கிறோம். ஆனால் ரொம்பவே அசைத்துப் பார்க்கும் வகையில் குற்றச்சாட்டுகளை மட்டும் வைக்காமல் இருந்தாலே போதும் என்பதுதான் சமாதான புறாவிடம் சொல்லப்பட்ட செய்தி.

க்ரீன் சிக்னல்
பழைய பாசத்தில் அந்த எம்.எல்.ஏ.வும் என்னால் முடிந்ததை நிச்சயம் செய்கிறேன் என உறுதியளித்துவிட்டு அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். அறிவாலயம் தரப்பில் இருந்தும் க்ரீன் சிக்னல் போயிருக்கிறது. இந்த நகர்வுகளை வைத்துதான் ஓபிஎஸ் பொதுக்கூட்ட மேடையில் கைகோர்த்து செயல்படுகிறார்கள் என பட்டவர்த்தனமாக போட்டுடைத்தார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த்












Click it and Unblock the Notifications