மதுரையில் அதிமுக வட்டச்செயலாளர் ராஜேந்திரன் வெட்டிக்கொலை - 6 பேர் கும்பல் வெறிச் செயல்!
மதுரை: மதுரையில் அதிமுக வட்டச்செயலாளர் ராஜேந்திரன், 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப் பட்டுள்ளார். தலைமறைவான குற்றவாளிகலைப் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை வசந்தநகர் வெங்கடாஜலபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் 77-வது வார்டு அதிமுக வட்டச்செயலாளராக இருந்து வந்தார். இவரது மனைவி ஜெயலட்சுமி. அந்த பகுதி அதிமுக கவுன்சிலராக உள்ளார்.

இந்நிலையில், இன்று காலை 5.45 மணியளவில் அதே பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட மர்மக்கும்பல் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில், கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டாள் புரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக ராஜேந்திரனின் உடலை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மதுரை மாவட்ட 77-வது அ.தி.மு.க. வட்டச்செயலாளராக அதே பகுதியில் குடோன்சேகர் என்பவர் இருந்துள்ளார். அப்போது நடந்த உட்கட்சி தேர்தலில் அவர் பதவியை இழந்தார். இதில் இவருக்கும், ராஜேந்திரனுக்கு முன் விரோதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் அடிக்கடி மோதி வந்துள்ளனர்.
சமீபத்தில் போஸ்டர் ஒட்டியதில் ஏற்பட்ட பிரச்சினையில் குடோன் சேகரின் மகன் செந்தில் கொலை செய்யப்பட்டார். இதில் குற்றவாளியாக ராஜேந்திரன் உள்பட சிலர் சேர்க்கப்பட்டனர்.
இதற்கு பழிக்குப்பழியாக ராஜேந்திரன் இன்று கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக குடோன்சேகரின் மற்றொரு மகன் சங்கர் உள்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
இது தவிர ராஜேந்திரனின் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
கொலையான ராஜேந்திரனுக்கு மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் சூரிய குமார், கார்த்திக், மருது, மகள் பிரியா ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர்.
அதிகாலையில் நடந்த இந்தக் கொலையால் மதுரையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜேந்திரன் உடல் வைக்கப்பட்டுள்ள மதுரை அரசு மருத்துவமனையில் ஏராளமான அதிமுகவினர் திரண்டுள்ளதால், அங்கு பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications