'அம்மா' விடுதலை.. தமிழகம் முழுவதும் "கட்டிங் + ஷேவிங்"கில் அதிமுகவினர் ரொம்பப் பிசி!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுதலையாகியுள்ளதைத் தொடர்ந்து அதிமுகவினர் தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான அதிமுகவினர் மொட்டை போட்டு காணிக்கை செலுத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனது முதல்வர் பதவி, எம்.எல்.ஏ. பதவி ஆகியவற்றை இழந்து சிறைக்குப் போனார். பின்னர் சிரமப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து அவர் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து மீண்டு வர வேண்டும், மீண்டும் முதல்வராக வேண்டும் என்று வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தீவிர வழிபாடுகளில் இறங்கினர்.

அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சிப் பிரமுகர்கள் கோவில்களுக்கு முடி வளர்த்து நேர்ந்து கொண்டனர். பல அமைச்சர்கள் தாடியோடு உலா வந்தனர். பெரும்பாலான அதிமுகவினர் வேண்டுதல்களோடு வளைய வந்தனர். அமைச்சர் செந்தில் பாலாஜி ஆள் அடையாளமே தெரியாத அளவுக்குத் தாடியோடு காணப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது தீர்ப்பளித்த கர்நாடக உயர்நீதிமன்றம், ஜெயலலிதாவை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவினர் தங்களது முடிகளை கோவில்களிலும், பொது இடங்களிலும் இறக்கி நேர்த்தி் கடனை செலுத்தி வருகின்றனர்.
மதுரையில் மாவட்ட நீதிமன்றம் அருகே அதிமுக தொண்டர்கள் 8 பேர் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பேரூராட்சி உறுப்பினர் எம்ஜிஆர் மனோகரன் உட்பட ஏழு பேர் மொட்டை அடித்து நேர்த்திகடனை தீர்த்தனர். இதேபோல, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் தமது ஆதரவாளர்களுடன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
திண்டுக்கல் அருகே உள்ள அகரம் சுக்காம்பட்டியில் அ.தி.மு.கவினர் அங்குள்ள காளியம்மன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அகரம் பேரூராட்சி துணைத்தலைவர் சக்திவேல் தலைமையில் 50 பேர் மொட்டை போட்டுக்கொண்டனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications