ரிசார்ட்டில் தங்கி இருப்பது ஏன்? அமைச்சர் நிலோபர் கபில் விளக்கம்
யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தி ரிசார்ட்டில் அடைத்து வைக்கவில்லை என அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார்.
சென்னை: எதிர்க்கட்சிகள் மற்றும் எதிரிக் கட்சிகள் தொல்லை தராமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கியிருப்பதாக தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னையை அடுத்த கூவத்தூரில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. சரவணன், கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்து தப்பி முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதற்கிடை பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் பெண் எம்எல்ஏக்கள் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது பேசிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், 124 சட்டசபை உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரும் எங்களைக் கட்டாயப்படுத்தவில்லை. யாரும் எங்களை இங்கு அடைத்து வைக்கவும் இல்லை.
நான் முஸ்லிமாக இருந்தாலும் எனக்காக தனி மரியாதை தருவதுடன், 5 மணி நேரம் தொழுகை நடத்துவதற்காக தனி இடத்தையும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். நாங்கள் ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications