அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சம்மட்டி அடி.. சிவி சண்முகம் பொளேர்
அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சம்மட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அரசுக்கு தொல்லை தர முயன்றவர்களுக்கு உயர்நீதிமன்றத்தின் தீரப்பு சம்மட்டி அடி என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா.பாண்டியராஜன் மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ் ஆர்.நட்ராஜ், ஓ.பன்னீர் செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன் ஆகிய 11 அதிமுக எம்எல்ஏக்கள் அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்தனர்.
இதையடுத்து இவர்கள் அனைவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரி திமுக கொறடா சங்கரபாணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசியல் களத்தில் தோற்றவர்கள்
இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது அரசியல் களத்தில் தோற்றவர்கள் அரசுக்கு நீதிமன்றம் மூலம் தொல்லை தர முயன்றனர் என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

தீர்ப்பு சம்மட்டி அடி
ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியடைந்துவிட்டதாகவும், தீர்ப்பு மூலம் உயர்நீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது என்றும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாலும் பழமும்
தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், 11 எம்.எல்.ஏக்கள் வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்றார். தீர்ப்பால் பாலும் பழமும் கிடைத்தது போல இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

புழுதிவாரி தூற்ற வேண்டும்
மக்கள் என்ற பேராயுதம் இருக்கும் வரை திமுகவின் அத்தனை ஆயுதங்களும் எங்களை நோக்கி வராது என்றும் அதிமுக அரசு மீது புழுதிவாரி தூற்ற வேண்டும் என்ற நோக்கில் திமுக வழக்கு தொடர்ந்தது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கட்டியம் கூறுவதாக உள்ளது
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு அளித்துள்ளார். பேசிய அவர் முத்தாய்ப்பான தீர்ப்புகளை நீதிமன்றம் அளித்துள்ளது; வர இருக்கும் தீர்ப்புகளுக்கு கட்டியம் கூறுவதாக உள்ளது என்றும் கூறினார். மேலும் வரலாற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் வழக்கில் தலைமை நீதிபதி மிக தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளார் என்றும் பாண்டியராஜன் கூறினார்.

நியாமான சரியான தீர்ப்பு
நியாமான, சரியான தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது என்று செம்மலை கூறியுள்ளார். இதனிடையே இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய முகாந்திரம் உள்ளதாக ஹைகோர்ட் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications