ஆட்சி அதிகாரத்தை கொல்லைப்புறமாக கைப்பற்ற ஐம்புலன்களையும் அடக்கி அமர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள்
சென்னை: ஆட்சி அதிகாரத்தை எப்படியேனும் கைப்பற்றி ஒரு கும்பலிடம் ஒப்படைக்க ஐம்புலன்களையும் பல மணிநேரமாக அடக்கி அமர்ந்திருந்த அதிமுக எம்.எல்.ஏக்களின் செயல்கள் மக்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சட்டசபையில் சசிகலா அணியின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்வைத்தது. ஆனால் திமுகவோ, கூவத்தூர் சிறையில் இருந்து நேரடியாக கைதிகளைப் போல அழைத்துவரப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை முதலில் தொகுதிக்கு அனுப்புங்கள். ஒருவாரம் கழித்து 'ரகசிய' வாக்கெடுப்பை நடத்தலாம் என வலியுறுத்தினர்.

நிராகரித்த சபாநாயகர்
ஆனால் சபாநாயகர் தனபாலோ இதை நிராகரித்தார். இதனால் அதிருப்தி அடைந்த திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரை முற்றுகையிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த கோரி வலியுறுத்தினர். இதில் பேப்பர்கள் கிழித்து வீசப்பட்டன; நாற்காலிகள் பறந்தன.

ஐம்புலன்களையும் அடக்கி...
இத்தனை களேபரத்துக்கு மத்தியில் சசி அணி எம்.எல்.ஏக்கள் ஐம்புலன்களையும் அடக்கி வைத்துக் கொண்டு மவுனிகளாக அமர்ந்திருந்தனர். அவர்களைப் பொறுத்தவரை எப்படியாவது அதிகாரத்தை கைப்பற்றிவிட வேண்டும்; ஆட்சி அதிகாரத்தை ஒரு கும்பலிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்கிற ஒற்றை குறிக்கோள் மட்டும்தான் இருந்தது.

சலனமற்றவர்கள்
11 நாட்களாக கூவத்தூர் உல்லாச விடுதியில் அடிமைகளாக அடைத்துவைக்கப்பட்டனர் அதிமுக எம்.எல்.ஏக்கள். இன்றும் கூட சட்டசபையில் இவ்வளவு களேபரம் நடந்ததும் சலனமற்றவர்களாக அமர்ந்திருந்த காட்சி மக்களை கொந்தளிக்க வைத்தது.

மக்கள் கொந்தளிப்பு
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திமுக சொல்கிறது.. .அது வேண்டாம் அல்லது வேண்டும் என்ற கருத்தைக் கூட சொல்ல திராணியற்றவர்களாக அமர்ந்திருந்தனர். கூவத்தூர் அடிமைத்தனத்தை விட இது படுமோசமாக இருக்கிறதே என்பதுதான் பொதுமக்களின் கருத்து.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications