அம்மா சோபாவில் சசிகலா அமருவதா?- கொந்தளிக்கும் கொங்கு மண்டல அதிமுக தொண்டர்கள்
அம்மாவை வச்சு பார்த்த இடத்தில யாரோ ஒருத்தரை வச்சு பார்க்க மனசு ஒப்பலைங்க... இனி நான் அரசியல்ல இருக்க மாட்டேன் என்பதுதான் பல அதிமுக பெண் தொண்டர்களின் குமுறலாக இருக்கிறது.
சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் அதிமுக பெண் தொண்டர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 16 நாட்களுக்கு மேலாகிவிட்டது. கிராமங்களில் ஜெயலலிதாவின் படத்திற்கு படையல் போட்டு அஞ்சலி செலுத்தி விட்டு சென்னைக்கு பஸ் ஏறி மெரீனா கடற்கரைக்கு வருகின்றனர் ஏராளமான தொண்டர்கள்.
எம்ஜிஆர் நினைவிடத்தில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வரும் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவர் வாழ்ந்த போயஸ் கார்டனுக்கும் செல்கின்றனர்.

கோவில் போல தொட்டு கும்பிட்டு கண்ணீர் மல்க வணங்கி செல்கின்றனர் தொண்டர்கள். இதனால் போயஸ் தோட்ட வீடு உள்ள பகுதி தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.
போயஸ் தோட்ட இல்லம்
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை அனைவரும் பார்க்கும்படி நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
போயஸ் கார்டன் வீட்டிற்கு உள்ளே சென்று சில தினங்களுக்கு முன் தொண்டர்கள் சென்று பார்க்க அனுமதி அளித்தனர். ஆனால் தற்போது நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக வருவதால் தொண்டர்கள் யாரையும் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
நாங்க பார்க்க கூடாதா?
இன்று ஜெயலலிதா சமாதிக்கு அஞ்சலி செலுத்த வந்த அதிமுகவினர் சிலர், போயஸ் கார்டன் உள்ளே சென்று பார்க்கலாம் என சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அங்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பெண் நிர்வாகிகள் பலரும் கோபம் கொண்டு கொந்தளித்தனர். அம்மா வாழ்ந்த வீட்டை நாங்கள் பார்க்கக் கூடாதா. எங்களைப் போன்ற தொண்டர்கள் உண்மையானவர்கள். தொண்டர்கள் யாரும் அம்மாவை மறக்கமாட்டர்கள். என்றும் மாறப்போவதில்லை என்றனர்.
யாரு இடத்தில் யாரு அமர்வது
அம்மாவுக்கு இணையாக யாரும் கிடையாது. அம்மா சோஃபாவில் சசிகலா உட்காருவதா? அம்மா இருந்தபோது உட்கார்ந்தாரா. அம்மா வீட்டில் இவர்களுக்கு என்ன வேலை என்று பெண் தொண்டர்கள் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அம்மா வாழ்ந்த வீட்டில் வசிக்கவும், சோபாவில் உட்காரவுமே எதிர்க்கும் தொண்டர்கள், சசிகலாவை பொதுச்செயலாளராகவோ, முதல்வராகவோ ஏற்றுக்கொள்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications