சகாயம் அலுவலகத்திற்குள் சொல்லாமல் கொள்ளாமல் புகுந்த அதிமுக மாஜி மாவட்டச் செயலாளர்
மதுரை: மதுரை கிரானைட் மோசடி வழக்கை விசாரித்து வரும் சகாயம் அலுவலகத்திற்குள் இன்று முன்னாள் அதிமுக மாஜி மாவட்டச் செயலாளர் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் விசாரணை நடத்தி வருகிறார். மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாக கட்டிடத்தில் அவரது அலுவலகம் செயல்படுகிறது. விசாரணை தொடங்கியது முதல் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையிலும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து கடிதங்கள் வந்தன. இதுகுறித்து சகாயம் போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சகாயத்திற்கு ஏற்கனவே 3 போலீசார் பாதுகாப்பாக உடன் வந்தனர். தற்போது எந்திர துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ்காரர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மதுரையில் இன்று சகாயம் அவரது குழுவினருடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தபோது எந்த வித முன் அனுமதியும் இல்லாமல் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலாளர் மச்சக்குமார் என்பவர் திடீரென நுழைந்தார். அப்போது அருகில் இருந்த போலீசார் ஓடிவந்து, முன் அனுமதியில்லாமல் பார்க்க முடியாது என்று மறுத்து தடுத்து அவரை அப்புறப்படுத்தினர்.
ஆனாலும் அவர் சகாயத்தை சந்திக்க வேண்டும் என்றார். இருப்பினும் அவரை விடாமல் போலீஸார் எச்சரித்து திருப்பி அனுப்பி விட்டனர்.
இதுகுறித்து அறிந்த மதுரை போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவ், சகாயத்திற்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், அவர் அனுமதியில்லாமல் யாரையும் சந்திக்க விடவேண்டாம் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications