வாக்கு எண்ணும்போது அதிகாரிகள் மூலம் முறைகேடு செய்ய அதிமுக திட்டம்: அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி: வாக்குகளை எண்ணும்போது வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் மூலமே முறைகேடு செய்ய ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்று தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தர்மபுரியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் கடந்த 24ம் தேதி அமைதியான முறையில் நடந்தது. 75 சதவீத வாக்குகள் பதிவான தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். தேசிய அளவில் 300க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மோடி பிரதமர் ஆவார்.
தேர்தல் நேரத்தில் அதிமுக வரலாறு காணாத அளவுக்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் பிறப்பித்த 144 தடை உத்தரவு அதிமுக பணப்பட்டுவாடா செய்யத் தான் உதவியது. தடை உத்தரவு பிறப்பிக்கும் முன்பு தேர்தல் ஆணையம் வியாபாரிகள், பொதுமக்கள் எடுத்துச் சென்ற பணத்தை பறிமுதல் செய்தது. ஆனால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகோ பணப்பட்டுவாடா நடந்தும் எங்குமே பணம் பறிமுதல் செய்யப்படவில்லை.
தர்மபுரியில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று தேர்தல் அதிகாரிகளுக்கு பல முறை தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உள்ள ஐந்தரை கோடி வாக்காளர்களில் நான்கரை கோடி பேருக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாக்குகளை எண்ணும்போது வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் மூலமே முறைகேடு செய்ய ஆளுங்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் வாக்கு எண்ணும் மையங்களை போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
என் மீதும், எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள் மீதும் தொடரப்பட்ட பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications